ஏக்கத்தோடு கேட்கிறது

நீ கண்ணில் தீ மூட்டும் தேவதை
அதில் விறகுகள் நானாவதே வதை ...
நீ விண்ணில் வாழும் தேவதை
அதில் நானும் ஆகவேண்டும் ஒரு சுதை..

பேசாமல் போகும் உன் உதடுகள் பேசாத கதைகள்
பேசி செல்லும் உன் கண்களே என் காதலின் விதை
நகராத இரவுகளில் உன் நினைவில் தூங்காது புரளும் மெத்தை
நேசித்து தவிக்கும் என் இளமையின் ஏக்கங்களோடு எரியும் சிதை...

வெற்றி என்று ஓன்று உண்டென அதன் பாதை காட்டிய உன் விழிகள்
இலக்கறியாத என்வில்லின் முனையில் நாண் ஏற்றும் குதை

போதும் உனக்கும் எனக்குமான கண்ணாமுச்சி ஆட்டங்கள்
கொஞ்சம் என்னை உனக்குள் புதை
இதுவரை நிகழ்ந்தன போதும் வேண்டாம் இனி விளையாட்டுகள்
மிஞ்சினால் தருவேன் செல்லமாக ஒரு உதை

ஒவ்வொரு முறை உன்னை பார்க்கும் போதும்
சொல்ல வருகிறேன் அதை
தெரிந்தும் தெரியாதது போல நடித்து தான்
கேள்வியோடு பார்க்கிறாய் எதை என
என்று சொல்வாய் என ஒளிந்துகொள்ளும் இதயத்திடம்
ஏக்கத்தோடு கேட்கிறது என் சதை
என்றும் முடியாமல் தொடரும் கன்னித்தீவில்
தயக்கத்தோடு நீந்துகிறது என் காதல் கதை

நீ கண்ணில் தீ மூட்டும் தேவதை
அதில் விறகுகள் நானாவதே வதை ...


"நீ கண்ணில் தீ மூட்டும் தேவதை" என்று நண்பர் இளவெண்மணியன் எழுதிய கவி வரி மிக பிடித்ததால் அதன் தாக்கத்தில் வந்த வரிகள்... கவிக்கு காரணமான வரியை தந்த நட்புக்கு நன்றி சொல்லிக்கொண்டு
யாழினி வளன் ...

எழுதியவர் : யாழினி வளன் (12-Aug-17, 10:19 am)
பார்வை : 393

மேலே