போலிகள் ஜாக்கிரதை

போலிச் சாமியார்கள் மாந்திரீகர்கள் ஆகியோரின் பித்தலாட்டங்கள் பற்றி ஊடகச் செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும் பாமர மக்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. ஒரு மாந்திரீகரை நம்பியவர் ஒருவரின் மனைவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளார். அவரது இரண்டு மகள்களையும் நள்ளிரவு பூசைக்கு ஒவ்வொருவராக அனுப்பச் சொல்லியிருக்கிறார் அந்த மலையாள மாந்திரீகர். அதற்கு அந்த
நம்பிக்கையாளர்
உடன்படதாதால் சுடுகாட்டில் பூசை செய்ய கடப்பாரையுடன் தன்னை அழைத்துச் செல்லும்படி கூறியிருக்கிறார். விழித்துக் கொண்ட அவரை சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றார் அந்த நம்பிக்கையாளர். அங்கு சென்றவுடன் "நள்ளிரவு பூசைக்கு உன் மகள்களை எனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு அனுப்பி வைக்காததால் உன் மூத்தமகனின் புத்திசுவாதீனம் சரியாகப் போவதில்லை. உன் குடும்பமே அழிந்து போகும்" என்று சாபம் கொடுத்தாராம் மலையாள மாந்திரீகர். ஆத்திரமடைந்த அந்த மனிதர் கடப்பாறையால் அந்த மாந்திரீகரை அடித்துக கொன்று பெட்ரோல் ஊற்றிக் கொழுத்திவிட்டாராம். பின்னர் எரிந்துகிடந்த உடல் பற்றி தகவல் அறிந்த காவலர்கள் அந்த ஏமாளி நம்பிக்கையாளரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள். இப்போது புத்திசுவாதீனம் இல்லாத மூத்த மகன், இரு பெண் குழந்தைகள் மற்றும் கடைசிப் பையனுடன் பாதிக்கப்பட்ட பெண் ஆதரவின்றித் தவிக்கிறார்.
■■■◆■◆■■◆■■■■■■■■■■■◆◆◆◆■■■■■
முன்னாள், இந்நாள் அரசியல் தலைவர்களில் பலரே மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடக்கும் போது பாமர மக்களை யார் நல்வழிப்படுத்துவது?
■■■■■◆◆◆◆◆◆■■■■■■■■■■◆◆◆●●◆■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (12-Aug-17, 10:59 pm)
பார்வை : 207

சிறந்த கட்டுரைகள்

மேலே