என் எதிர்காலத்தின் புகைப்படம்

[] என் எதிர்காலத்தின் புகைப்படம் ...
----------------------------------------------------------------------------


அலட்சியமாய் வாங்கி
அதிசயமாய் பார்கிறார்கள்
நான் நீட்டிய புகைப்படத்தை ..!

அலட்சியத்திற்கு காரணம்
புகைப்படம் என் கையில் இருந்தது
அதிசயத்திற்கு காரணம்
புகைப்படத்தில் நீ இருந்தது ..!

எப்படியேனும் ஒரு அழகியை
மனம் முடித்து விட வேண்டுமென்ற
என் கனவானது
அதிகபட்ச எதிர்பார்ப்புகளை
கொண்டிருந்தது !

அவை எல்லாம் மிக மிக
குறைந்தபட்சம் என்று
நான் உணர்ந்திருந்த நேரம்
என் கண்கள் உன்னை
கண்டிருந்தது ..!

கான கிடைக்காத அழகு
ஆள கிடைக்கிறதே
சேர தகுந்தவனா என்று - நான்
ஆழ சிந்திக்கும் முன்
தேனை வெறுக்காதே என்று
ஆசை ஆணை இடுகிறதே
அதற்கு என் ஆண்மை பனிகிறதே

போதுமெனும் மனம் கொண்டு
ஊர் போற்ற வாழ்ந்திருந்தேன் ..
பேராசைக்காரன் என்ற
பேர் வாங்கி தந்துவிட்டாய் - உன்
பேரழகால் ஒரு நொடியில் !

இவளை தான் பார்த்திருக்கிறோம் என்று
ஈன்றோர் நீட்டிய நிழற்படம் சொன்னது
இவள் தான் உன்
நிஜத்திற்குரியவள் என்று ..!

"ஒளிமயமான எதிர்காலம்
உன் புகைபடத்தில் தெரிகிறது" என்று
பழைய பாடல் ஒன்றை -
மாற்றி பாடி மகிழ்ந்து திரிகிறேன் ..!


- யாழ் ..

எழுதியவர் : யாழ் கண்ணன் (13-Aug-17, 3:38 pm)
பார்வை : 297

மேலே