வேறென்ன வேண்டும்

இந்தியாவின் எழுபத்தொன்றாவது
சுதந்திர தினவிழா
கொண்டாடிடுவோம் உற்சாகமாய்..
பாடி ஆடுவோம் ஆனந்தமாய்..
அதில்தானிருக்கிறது
விடுதலை வீரர்களுக்கு
நாம் செலுத்தும் நன்றிகள்..

முப்பது கோடிகள்...
இந்தியாவின்
மக்கள்தொகை
ஆயிரத்து தொள்ளாயிரத்தின்
ஆரம்பத்தில்...
அப்போது இருந்தது
தனியொருவனுக்கு
உணவில்லையேல்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்னும் நிலை...

நூற்றிருபத்தைந்து கோடிகள்..
இந்தியாவின் மக்கள்தொகை
இந்த நூற்றாண்டின்
ஆரம்பத்தில்...
இப்போது உள்ளது
உண்ணாநோன்பு இருக்காத
அனைவருக்கும்
உணவு கிடைக்கும்
தன்னிறைவு நிலை...
சிறந்த தொழில்நுட்பத்தோடு
கலந்த உழைப்பு இந்தியாவின் வளர்ச்சியை நிஜமாக்கியது..

தேசிய நெடுஞ்சாலைகளும்
ஆகாய மற்றும் கடல்வழி
போக்குவரத்துக்களும்
விஞ்ஞானத்தின்
விசாலமும்...
தொழிற் புரட்சியும்
பசுமைப் புரட்சியும்
வெண்மைப் புரட்சியும்
இந்திய வளர்ச்சியை
சாத்தியமாக்கியது...

நாம் சுதந்திரக்காற்றை
சுவாசிக்க போராடியவர்கள்
தியாகம் செய்தவர்கள்
தன்னுயிர் ஈந்தவர்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
மகாகவி பாரதியார்
கப்பலோட்டிய சிதம்பரனார்

வீரன் வாஞ்சிநாதன்
கொடிகாத்த குமரன்
ஜவஹர்லால் நேரு
சுபாஷ் சந்திரபோஸ்
மகாத்மா காந்தி இன்னும்
எண்ணற்றோரின் தியாகங்களை
நினைவு கூர்ந்து கொண்டாடுவோம்...

இந்திய
சுதந்திரத்திற்குப்பின்
ஆள்பவர் யாராகிலும்
அரசுப் பணிகள்
அனைத்திலும்
இந்தியர்களே!
அரசாளப் படுபவர்கள்
இந்தியர்களே!
அனைத்து அரசுகளும்
இந்திய அரசுகளே!
இந்தியாவின் வளர்ச்சியில்
இந்தியன் ஒவ்வொருவருக்கும்
உண்டு பங்கு...
அதுவே இந்திய
ஒற்றுமையின் பாங்கு...

இந்திய சுதந்திரம்
தொடர்பாய்
மூன்று காலத்தினர்...
இந்திய சுதந்திரத்திற்கு
போராடி கனாக்களில்
மட்டுமே சுதந்திரம் கண்டு
கண் மூடியவர்கள்...
போராடிப்பெற்ற
சுதந்திரத்தை சுகித்தவர்கள்...
சுதந்திரம் கிடைத்தபின்
தோன்றி சுதந்திரம்
அனுபவிக்கும்
நம் போன்றோர்...
சுதந்திரம் பேணுவதில்
மூன்றாம் வகையினரின்
பங்களிப்பு அதிகம்...

முதன் முதலாய்
ஏவிய முதல் தடவையிலேயே
வெற்றிகரமாய்
செவ்வாய் கிரகம்
சென்ற துணைக்கோள்
இந்தியாவினுடையது...
இந்த சாதனை
இதுவரை வல்லரசு
எதுவும் செய்யாதது...

இந்தியா வல்லரசாகும்
காலத்தில்... அது
கலாச்சாரமும் பண்பாடும்
சிகரம் தொட்ட உலகின்
ஒரே வல்லரசு என
பெயர் கொள்ளும்..

எத்தனை மொழிகள்
எத்தனை இலக்கியங்கள்
கலைகள்தான் எத்தனை
இசை வகைதான் எத்தனை
பழக்க வழக்கங்கள் பல...
இருப்பினும் இந்தியன்
என்ற உணர்வில்
இந்தியா வாழ்கிறது...
வளர்கிறது...

மக்கள்தொகையில் இந்தியா
உலகில் இரண்டாமிடத்தில்...
இளைஞர்களின் எண்ணிக்கையில்
உலகில் முதலிடத்தில்...
உலகளவில் பொருளாதாரத்திலும்
ராணுவ பலத்திலும்
வல்லரசு நாடுகளைவிடவும்
வளர்ச்சி அடைந்து
வல்லமை அடைய
நம் அன்புக்குரிய முன்னாள்
குடியரசுத்தலைவர்
டாக்டர் அப்துல்கலாம்
அவர்கள் சொன்ன
ஐந்து அம்சங்கள்...

விவசாயமும் உணவுப்பொருள்
பதனிடுதலும்...
கல்வியோடு சுகாதாரம்
மிகை மின்சாரம்
தகவல் தொழில்நுட்பம்
தேசப்பாதுகாப்பு அலகுகளை
பாதுகாப்போடு ஆக்கப்பணிகளுக்கும்
அனுகூலமாய்ப் பயன்படுத்துதல்
ஆகியவற்றில்
அனைவரும் ஒன்றுபட்டு
உழைத்து உயர வேண்டும்..

புதிய தொழில்நுட்பம் கலந்த
இந்தியரர் ஒவ்வொருவரின்
சீரிய உழைப்பிலும்
எதைச்செய்ய வேண்டும்
எவ்வாறு செய்ய வேண்டும்
என்பதில் மத்திய மாநில
அரசாங்கங்களின் வழிகாட்டுதலிலும்
அதனைக் களங்கமில்லாமல்
செயலாற்றுவதிலும்
இருக்கிறது வளர்ச்சியடைந்த
வல்லரசு இந்தியா...

கழைய வேண்டிய பழையன
புகுத்த வேண்டிய புதியன
செயல்களில் நவீனம்
இவற்றில் இருக்கிறது இந்தியா
வல்லரசாகும் சூட்சுமம்...
அனைவருக்கும் வேலை என்பது
வேலை தேடும் இந்தியர்களின்
வேண்டுகோளாய் இல்லாமல்
வேலைகள் அனைவருக்கும்
வழங்கப்படுவதாய்
இருந்திடல் வேண்டும்...
வேலைகள் செய்யும்
தளங்கள் கண்டறியப்பட்டு
அரசாங்கம் ஒவ்வொரு
நொடியும் உத்வேகமாய்
செயலாற்ற வேண்டும்...

அரசியலிலும் அரசாங்கத்திலும்
கர்ம வீரர்கள் காமராஜர்கள்
அப்துல் கலாம்கள்
அதிகம் அதிகம்
உருவாக வேண்டும்...
இது ஒன்று போதும்... அதைவிட
வேறென்ன வேண்டும்
வேறென்ன வேண்டும்
இந்தியா வல்லரசாக...

சாதனைகளைக்
கொண்டாடுவோம்...
இன்னும் சாதிப்பதற்குத்
திட்டமிடுவோம்...
அனைவருக்கும்
சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்,
வீரசிகாமணி.

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (15-Aug-17, 7:22 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 407

மேலே