பெற்று விட்ட சுதந்திரம்

தியாகங்கள் வரலாறாய் நிற்க

சோகங்கள் மட்டும் தொடர

பெற்று விட்டோம் சுதந்திரம்

கல்வியை காசுக்கு விற்க

மருத்துவம் மலிவற்று போக

பெற்றுவிட்டோம் சுதந்திரம்

தெருவிற்கு ஒரு மதுகடை

யாரும் வாங்க இல்லை தடை

பெற்றுவிட்டோம் சுதந்திரம்

ஜாதி மத துவேஷம் வளர்த்து

நிர்வாண ஊர்வலம் விட

பெற்றுவிட்டோம் சுதந்திரம்

கோடிகளில் பிரதிநிதிகள் புரள

தெருக்கோடிகளில் மக்கள் கதற

பெற்றுவிட்டோம் சுதந்திரம்

தன்மானத்தை காசுக்கு விற்று

அவமானத்தை பரிசாக பெற

பெற்றுவிட்டோம் சுதந்திரம்

பெற்று, "விட்ட" சுதந்திரத்தின்

அருமை பெருமையாவும் வருடம்

போல் நீள இன்று

கண்ணகி நகரில் வசிக்கு

சோரம் போன பெண்ணாய்

போராடி பெற்ற சனநாயகம்
#sof_sekar

எழுதியவர் : Sekar N (15-Aug-17, 7:46 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 342

மேலே