தென்றலை உடைத்து

தென்றலை உடைத்து!
தென்றலை உடைத்து!!
காற்றினைக் கிழித்து!
காற்றினைக் கிழித்து!!
பெண்ணிங்கேத் தோன்றிவிட்டால்!!
கடலினில் ஓடிடும்
செம்மீனைப் பிடித்து!
வானத்தில் தோன்றிடும்
விண்மீனைப் பறித்து !
கண்ணிற்குள் வைத்துக்கொண்டால்!!
காற்றினில் வீசிடும்
வாசனைப் போலவே!
வானத்தில் தோன்றிடும்
வானவில் போலவே!
என்னுயிரை மறைத்துவிட்டாய்!!
சாலையின் ஓரத்தில்
நின்றிடும் பெண்ணிங்கே!
வெட்கத்தில் கண்ணிமைத்து
சொல்லிடும் நேரத்தில்!
காணாமல் தொலைந்துவிட்டாய்!!!

எழுதியவர் : sahulhameed (15-Aug-17, 9:39 pm)
பார்வை : 358

மேலே