சூப்பர்நோவா

-றிகாஸ்

'இப்போ சொல்லுங்க புரோபசர், Are you ok?.'

"Really?. You are asking me that?.. என்னால யோசிக்காமலே இருக்க முடியல டொக்டர் சந்திரசேகர்" புரோபஷரின் கண்கள் புடைத்திருந்தது.. நீண்ட தூக்கத்தில் அல்லது ஆழமான சிந்தனையில் இருந்திருக்க வேண்டும்.

"உங்களோட சிந்தனைல நானும் பங்கு போட்டுக்கலாமா.. வித் யுவர் பேர்மிஷன்.. ஏன்னா நேத்து பேசும்போது சுப்பர்நோவா பத்தி சொல்லியிருந்திங்க.. அதோட உங்க மெதமெட்டிகல் போர்மியூலா வோஸ் வெரி இம்பிரஷிவ்.. ஆனா என்னால கொஞ்சம் கூட புரிஞ்சிக்க முடியல.."

"என்னோட வாழ்க்கைல நாற்பது வருஷத்த இதுக்கு பின்னாலயே மல்லுக்கட்டிருக்கன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.. ஒத்த நிமிஷத்துல யாரும் விளங்கிட முடியாது இல்லையா?"

"ஏன்?.. உங்க அஷோசியேஷன்ல கூடவா உங்களோட போர்முலாவ ஏத்துக்கல?.."

"அவங்க எல்லாமே எலும்பு துண்டுகள பொறுக்கி தின்ற எச்சய்ங்க.. பிளடி சய்ன்டிஸ்ட்ஸ்.." புரோபசரின் கோபத்தில் கண்கள் புடைத்து வாயில் இருந்து எச்சில் துளி ஒன்று தெறித்தது..

"Calm down professor, I just want to ask a question, உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கா?"

"கடவுள நம்புறது நம்பாதது ரெண்டுமே முட்டாள்தனம்னு பார்குறவன் நான். ஆனா பைனெரியா ஆன்சர் வேனும்னா கடவுள் உண்டு.. காஸ்மிக் ரிலிஜியஸ் பீலிங் பத்தி நீங்களே கட்டுரைகள் எழுதுவிங்களே எனக்கிட்ட இந்த கேள்வி அவசியம் தானா?"

"உங்களைப் போல அறிவாளிகளுக்குத்தான் அதன் உண்மைகள் புரியுமே அதனால் தான் உங்ககிட்ட கேக்குறன்"
"நம்மள போல அறிவாளிகள்னு சொல்லுங்க"

"உங்களோட போர்மியுலா பத்தி சொல்லுங்களேன்" டாக்டர் சந்திரசேகர் மெதுவாக மெதுவாக சிரித்துக்கொண்டு புரோபஷரை நோக்கினார்..

"எஸ்.. அதோட மெதமெட்டிகல் எஸ்பெக்ட் பத்தி நான் சொல்றதா இருந்தா நீங்க இந்த உலகத்தவிட்டு வெளிய போகனும்.. இந்த பிரபஞ்சத்த முடிவிலிக்கு அப்பால் இருந்து பார்க்கனும்.. அதனோட அசைவுகள்.. வெளியும் காலமும் எப்படி பின்னப்பட்டிருக்குன்னு புரிஞ்சுக்கனும்."

"ஐ ஹோப் ஐ க்கேன்.."

புரோபசர் தொடர்ந்தார்..
"இந்த பிரபஞ்சத்தை சூழவும் ஈர்ப்பலைகள் பரவி பிரமாண்டமா இருக்கு.. அதுல நம்மளோட கெலக்ஷி இங்க இருக்கு.."

புரோபஷரின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்த டாக்டர் சந்திரசேகருக்கு அறிவின் முக்திநிலையால் ஏற்பட்ட அவருடைய கண்களின் பிரகாசம் ஆச்சரியமூட்டியிருக்க வேண்டும். அவருடைய கைகள் காற்றில் ஆடிப் பறந்து மொத்த பிரபஞ்சத்தையும் விளக்கி வியக்க வைத்தது..

"இப்போ இந்த ஈர்ப்பலைகள் மிகச் சாதரணமாக இருக்கு ஆனால் இன்னும் ஐம்பது வருஷத்துல இதன் அகோரத்தை நாம் சந்திப்போம் ஆனா அதன் பிரிகுவன்ஷியை நம்மால் உணர முடியாது.. உணருவதற்கு இந்த கெலக்ஷியே இருக்காது.." புரோபசருக்கு மெதுவான இருமல்.. கனைத்தார்..

"இந்தாங்க.. கொஞ்சம் தண்ணீர் புரோபசர்.."

"தாங்ஸ் டாக்டர்.. இந்த பிரபஞ்சத்துல இருக்கிற ஒவ்வொரு நட்சத்திரமும்... ஒவ்வொரு கோள் தொகுதிகளும்.. ஏன் நான்.. நீங்க எல்லாரும் ஒரு வைப்ரேசன ஒவ்வொரு நனோ செக்கனுக்கும் உருவாக்கிட்டே இருக்கம்..ஆனா இது எல்லாம் சேர்ந்து ஒரு குழப்பமான பிரீகுவன்சிதான் நமக்கு கெடக்குது.. நான் இத ஆராய்ச்சி செய்தன்.. நாற்பது வருஷமா ஒரே பார்வைல இருந்து ஒரு போர்மியுலாவ உருவாக்கி அதற்கு ஏற்றபோல ஒரு கருவிய கண்டுபிடிச்சன்.. அது ஒவ்வொரு வைப்ரேஷனயும் தனித்தனியா பிரிச்சு காட்ட உதவியது"

"வாவ்.. எக்ஸலன்ட் புரோபஷர்.."

"ஆனா அதன் மூலமா ஒரு பேராபத்து இருக்கிறது தெரிஞ்சது.."

"அப்படியா.. வாட் இஸ் தட்"

"அதுதான் சுப்பர் நோவா, இரண்டு நட்சத்திரங்கள் மிக மிக அருகில் இருந்து ஒரே அளவான அதிர்வ உருவாக்கிட்டு இருக்கு.. அந்த அதிர்வோட பிரிக்குவன்ஷி அசுர வேகத்துல வளர்ந்துட்டே இருப்பதோட அவற்றின் வேகம்கூட ஒளியின் வேகத்தை நெருங்கிட்டு இருக்கு, அவை இரட்டை நட்சத்திரங்களா மாறி மிக விரைவில் ஒன்றா இனைவதற்கான வாய்ப்பு இருக்குறதா நான் உணரன், அவை இணைந்தால் ஏற்படுற மிகப் பாரிய வெடிப்பால் சூரியன் உட்பட இந்த பால்வெளியே சுக்குநூறாகிவிடும் அல்லது இஸ்பேஸ்ல எங்கோ தூக்கிவீசப்படும், ஷோ.. நாம சுப்பர் நோவா ஒன்றை கடந்தே ஆகனும் என்கிறது நமது விதி"

அறையின் கதவை திறந்துகொண்டு ஒரு அழகி உள்ளே வருகிறாள். அவளுடை இரண்டு கைகளும் அழகிய தட்டினால் பொன்நிற மதுரச பானத்தை ஏந்திக்கொண்டிருந்தது..

"Have a good day professor, this is a joyfull drink for you specially" என்று புரோபசரை நோக்கி புன்னகையோடு பரிமாரினாள். அவளுடைய நீல நிற கண்களை புரோபசருக்கு பிடித்திருக்க வேண்டும் என்று அவருடைய பார்வையிலே தெரிந்தது.

"Your good lady" புரோபசர் கொஞ்சம் அசடு வழிந்துதான் போனார்.. அழகி அறையை விட்டு வெளியேறும் வரை அவளையே ரசிப்பதை எதிரில் இருந்து புன்முறுவலுடன். டாக்டர் சந்திரசேகர் பார்த்துக்கொண்டே இருந்தார்.

"எஸ்.. டொக்டர்.. we will come to the point" மதுரசத்தை அருந்தியவாறே பேச ஆரம்பித்தார் புரோபசர்.

"நான் சொல்றத நீங்க நம்புறிங்களா.. அப்டி இல்லன்னா I can prove it mathematically"

"நிச்சயமாக, என் ஞாபகம் சரியா இருந்தா, முதன்முறையா 1054ம் வருஷம் சுப்பர் நோவா ஏற்பட்டிருக்குன்னு நினைக்கிறன்"

"அதற்கு முதலே பிரபஞ்சத்துல சீன, அரேபிய வானியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.. அதற்கு பிறகும் ஏற்பட்டிருக்கு."

"ஆனா அப்போவெல்லாம் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படலயே"

"அதோட இதன் விளைவுகள ஒப்பிட முடியாது.. இதனால இந்த சூரிய குடும்பமே பஞ்சு பஞ்சா பறக்கும், அதுக்கு பிறகு கடவுள் பற்றிய கேள்வியே அவசியமில்லை.. ஹா.. ஹா.." சத்தமாக சிரிக்கிறார் புரோபஷர்..

சிகரட் பிடித்து காவி படர்ந்த அவருடைய பற்களில் அந்தச் சிரிப்பு அகோரமாக இருந்தது. அவருடைய நாக்கில் மதுரசத்தின் சுவை சற்று துவர்ப்பாக மாறியது.. தலை சுற்றுவது போல உணர்வு, கைகள் இரண்டாலும் தலையை இருகபிடித்துக்கொண்டு கதற ஆரம்பித்துவிட்டார்..
"I'am totally fucked up doctor and let me out of here right now.. please?" படிப்படியாக குரல் மங்கி மயக்கநிலைக்கு சென்றார்.

"Calm down professor, நீங்க குடிச்சது மதுரசம் இல்ல, பைத்தியம் தெளியுறதுக்கான மருந்துதான்.. அப்படியோ தூங்கிடுங்க.. Sister come on.. Take him to the bed" டாக்டர் சந்திரசேகர் அவரை பிடித்து சோபாவில் படுக்கவைத்தார்.
ஓட்டமும் நடையுமாக பதட்டத்தை முகத்தில் அப்பிக்கொண்டு உள்ளே வருகிறாள் அழகி.

எழுதியவர் : றிகாஸ் (16-Aug-17, 11:31 pm)
சேர்த்தது : றிகாஸ்
பார்வை : 241

மேலே