போர்க்களம் - 1

பாகம் 1

ஆர்யவர்தா தீவு எல்லை பகுதியில் போர் வீரர்கள் குவிக்கப்படுகின்றனர். ஆயுதங்களின் சத்தமும், குருதி வழிந்தோடவிருக்கும் போரையும், இடியுடன் பெய்து கொண்டிருக்கும் மழை உணர்த்துகிறது. சிறிது நேரத்தில் போருக்கு ஆயத்தமாக சங்கு முழங்குகிறது. ஆர்யவர்தா தீவு வீரர்கள் அம்புகளை சிந்து தீவு எல்லையை நோக்கி எய்கின்றனர், மழையென பெய்யும் அம்பு சிந்து தீவு வீரர்களை சரமாரியாக தாக்குகிறது. அதற்கு சிறிதும் அச்சமடையாத சிந்து தீவு வீரர்கள் உடனே பதில் தாக்குதல் செய்கின்றனர். அங்கு மழையும் ஓயவில்லை போரும் ஓயவில்லை, தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. இந்த இரு தீவுகளுக்கும் இந்த போர் புதிதல்ல. தங்களின் எல்லைகளை பாதுகாத்து கொள்ள வருடத்துக்கு இரு முறையாவது போர் நடக்கும்.

அண்டத்தில் இவ்விரு தீவுகளும் பெரும் தீவுகள், பசுமையும், வளமையும் என்றும் அழியாத தீவுகள். முன்பு ஒரு காலத்தில் இரு தீவுகளும் நட்போடுதான் இருந்து வந்தன. ஆனால் சில அரசியல் வாதிகளின் சூழ்ச்சியால் நட்பு முறிந்து, போர் தொடர்ந்தது.

ஆர்யவர்தா தீவின் மன்னன் பரதன். தன் தந்தையின் மரணத்துக்கு பிறகு முடி சூட்டிய அவன், தன் தந்தையின் குறிக்கோளை வழியாக வைத்து பின்பற்றுபவன்.
அவனின் மந்திரி பெயர் சந்த்ரவன். சந்த்ரவன் பரதனின் உயிர் நண்பன், மேலும் மிகவும் திறமை மற்றும் பொறுமைசாலி. அரசியல் முடிவுகளும், போரில் வெல்வதற்கான யுக்திகளும் சந்த்ரவன் மூலமாகவே முடிவெடுக்கப்படும். அந்த அளவிற்கு அனுபவமும் நாட்டு பற்றும் கொண்டவன்.

சிந்து தீவின் மன்னன் ருத்ரவன். ருத்ரவனுக்கு சந்த்ரவன் போன்ற ஒரு திறமை மிக்க மந்திரி அவன் அரசவையில் இல்லை. எனவே அவன் வகுக்கும் அனைத்து போர் யுக்திகளும் எப்பொழுதும் சந்த்ரவானால் சுலபமாக முறியடிக்கப்படும். சந்திரவனை அளித்து விட்டால் நாம் சுலபமாக ஆர்யவர்தா தீவை வென்று விடலாம் என்பது ருத்ரவனின் எண்ணம்.
இன்று சிந்து தீவில் அரசவை கூட்டம் கூட்டப்பட்டது. அனைத்து மந்திரிகளும், படை தளபதிகளும் அரசவை கூட்டத்தில் பங்கேற்றனர்.

ருத்ரவன் அரசவைக்கு வந்தவுடன், போர் மற்றும் எல்லை பகுதி நிலவரங்களை தலைமை பொறுப்பிலுள்ள தளபதி மகிஷாவிடம் கேட்கிறான். அதற்கு தளபதி மகிசாவன் கூறியதாவது,

மன்னா நாம் ஒவ்வொரு போரிலிம் பல போர் வீரர்களை இழக்கிறோம், ஆனால் அதற்கு ஏற்றால்போல் போர் வீரர்களை உருவாக்குவதில் பெரும் தாமதம் ஏட்படுகிறது. இதனால் நாம் நம் நாட்டின் போர் வலிமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம். எனவே இதற்கு நீங்கள்தான் ஒரு நல்ல முடிவை உடனே எடுக்க வேண்டும் என்ற கூறுகிறான்.

அதே நேரத்தில் ஒரு மந்திரி எழுந்து, இன்னொரு முக்கிய பிரச்னையையும் மன்னர் முன் வைக்கிறான்.
அவன் கூறியதாவது,

மன்னா நம் நாட்டில் தீமைகள் தலைவிரித்து ஆடுகின்றது. கொள்ளையர்களும் திருடர்களும் பெருகிவிட்டனர். இதனால் மக்கள் மிகவும் துயரம் அடைகின்றனர். இந்த விஷயத்திலும் நீங்கள் உடனே ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் மன்னா என்று கூறுகின்றான்.

இருவரின் கூற்றையும் கேட்ட ருத்ரவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். நாளை மீண்டும் அரசவை கூடட்டும், அப்பொழுது நான் இவ்விரு பிரச்சனைக்கும் ஒரு நல்ல தீர்வை கூறுகிறேன் என்று கூறிவிட்டு ருத்ரவன் அரசவையை விட்டு வெளியேறினான்.

மறுநாள் ருத்ரவனின் ஆணைக்கிணங்க அரசவை கூட்டப்பட்டது. மன்னன் ருத்ரவன் பேச தொடங்கினான்.

நாம் உடனே ஒரு சட்டம் ஒன்று பிறப்பிக்க வேண்டும். அச்சட்டத்தை இயற்றினால் நாட்டில் நடக்கும் அநியாயங்கள் குறையும் மேலும் நமக்கு புதிய போர் வீரர்களும் கிடைப்பர் என்ற கூறுகின்றான். ருத்ரவன் கூறியதை கேட்டு அரசவையில் இருக்கும் அனைவரும் குழம்ப தொடங்கினர்.

ருத்ரவன் தன் விளக்கத்தை அவையினர் முன் தொடர்ந்தான்.

நம் நாட்டில் தற்போது இருக்கும் கடுமையான தண்டனை மரண தண்டனை. அப்படி மரண தண்டனை விதிக்க பட்டவர்கள் தூக்கிலடப்பட்டு கொல்லப்படுவார்கள். அதற்கு பதிலாக அவர்களுக்கு போர் பயிட்சி
கொடுத்து அவர்களை போர் வீரர்களாக போர் களத்தில் இறக்க வேண்டும்.

போரின் போது கைதி வீரர்கள் முன் நின்று போர் புரிய நம் வீரர்கள் அவர்களின் பின் நிட்பர். ஒரு வேலை அவர்கள் பின் நோக்கி நகர்ந்தாள் நம் வீரர்கள் அவர்களை தாக்கி கொள்ள வேண்டும். மேலும் திறமையாக போர் புரியும் வீரர்களுக்கு தண்டனைகள் குறைக்கப்படும்.

இதில் ஏதும் குழப்பமுள்ளதா என்று ருத்ரவன் அவையினரிடம் கேட்கிறான்.

அப்பொழுது ஒரு மந்திரி எழுந்து, மன்னா நாம் பயிட்சி கொடுக்க போகும் மனிதர்கள் ஏற்கனவே பயங்கர தீமைகளை செய்தவர்கள் அதனால்தான் அவர்களுக்கு கடுமையான மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நாம் அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து பயிட்சி அளித்தால் அது நமக்கே விபரீதமாக முடிய வாய்ப்பு உள்ளது என்று கூறினான்.

அந்த மந்திரியின் கூற்றுக்கு ருத்ரவன் பதிலளித்தான்,

போர் பயிட்சி கொடுக்கும்பொழுது கைதிகளின் கைகளும் கால்களும் இரண்டடி தூரம் வரை செல்லும் அளவுக்கு சங்கிலியால் பிணைக்க படும், அதன் பின் போர் களத்தில் போர் தொடக்கும்பொழுது மட்டுமே அவர்களின் சங்கிலிகள் அவிழ்க்கப்படும். அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு ஒரே ஒரு ஆயுதம் மட்டுமே கொடுக்கப்படும்.

மேலும் இச்சட்டம் எதிர்கால குற்றவாளிகள் மட்டுமில்லாமல், தற்போது சிறையில் உள்ள குற்றாவளிகளுக்கும் பொருந்தும்.
அவையினர் அனைவரும் ருத்ரவனின் சிறந்த சிந்தனையை வெகுவாக பாராட்டினார்.
மன்னனின் ஆணைக்கிணங்க சட்டமும் உடனே பிறப்பிக்கப்பட்டது.

தொடரும்........

எழுதியவர் : (17-Aug-17, 11:12 am)
சேர்த்தது : Selvakumar
Tanglish : porkkalam
பார்வை : 198

மேலே