அழகு

மின்வெட்டு நாட்களில் எறியும்
விளக்கின் வெளிச்சம் அழகு
கண்பட்டு தீண்டும் காதல்
கவ்வும் கோணமும் அழகு
பருவத்தில் வீசும் புயல்
காற்று கூட அழகு
பசிக்கின்ற போது கிடைக்கும்
பழைய சோறும் அழகு

காற்று வீச பூக்கள்
விழுந்தால் கோபமில்லை
பூக்கள் பூக்க காற்று
வந்தால் பாவமில்லை.


விடியும் வரை பொழிகிறது மழை
என் வீட்டு கூடையில் கோழி அவைக்காக்கிறது
இதுவும் அழகு.

எழுதியவர் : நா விஜய் பாரதி (17-Aug-17, 3:29 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : alagu
பார்வை : 135

மேலே