இதய சேமிப்பில் நிரந்தரமாய் நீ சொன்ன வார்த்தைகள்

எதிர்படும் அத்தனை கண்ணாடியிலும் முகம் பார்க்கும்
ஆவல் அதிகரித்து விட்டது !
"மிகவும் பிடித்து இருக்கிறது"
உன்னை எனும் அவள் சொன்ன வார்த்தை
கண்ணாடியில் அச்சிடப்பட்டதாய்
விழிகளுக்கு தெரியலாம் போல !


அரைக்கை சட்டைகள் ஒன்றிரண்டு அப்படியே
அடுக்கிவைத்த படியே தான் இருக்கிறது
உங்களுக்கு அது நல்லாவே இல்லை
என்று ஒருமுறை சொன்ன
ஞாபகம் எனக்கும் தான் பிடிக்கல !

கலர் கலர் காகிதங்களை தேடி அலைகிறேன் !
கடை கடையாய் ஒரு கவிதை
எழுதி கொடுத்து படித்து விட்டு !
அழகா இருக்குடா ! கவிதையும்
காகிதமும் சொன்ன வார்த்தைகளுக்காக
இன்றும் கலர் கலர் கவிதைகள் தான் !

மரத்தின் அடியில் நின்றே உன்னை பார்த்து ரசிப்பது,
எனக்கும் பிடித்து போன ஒன்றுதான் ! காற்றின் அசைவோடு
கிளை அசையும் வேளையில் என் விரல்களால்
என் கேசம் கோதும் அழகை பார்த்து ,
பிடித்து இருக்கிறது என்று சொன்ன ஞாபகம் எனக்கு !

இருசக்கர வாகனத்தை இப்போதெல்லாம் வேகமாவே
ஒட்டுவதில்லை என்று
உறுதியாகத்தான் இருக்கிறேன் !
கண்டிப்பான உத்தரவு அது மீறுவது
உடன்பாடு இல்லை எனக்கும் !

அப்படி பார்க்காதே ! என்று பலமுறை
சொல்லியும் கேட்கமாட்டியாடா பொறுக்கி !
அந்த பார்வையின் பொருள்
புரிந்த சமர்த்தியக்காரி அவள் !
இருந்தாலும் அவ்வப்போது பார்த்து
திட்டு வாங்குவது உண்டு !

எழுதியவர் : முபா (17-Aug-17, 4:12 pm)
பார்வை : 93

மேலே