இதயத்தில் ஒளித்து வைத்து இருக்கும் என்மேலான காதல்

நான்கு திசைகளிலும்
நாலா புறமும் ,அங்கும் இங்கும்
அப்பக்கம் ,இப்பக்கம் !
எல்லா பக்கமும் தேடுகிறாய் !

என்னை பார்ப்பதற்கு உன் தேடல்
இத்தனை அழகா !

உன் இதயத்தில் ஒளித்து வைத்து இருக்கும்
என்மேலான காதல் எத்தனை அழகாய் இருக்கும் !

இருப்பினும் நான் ஒளிந்து நின்று உன்னை
பார்த்ததை கண்டுபிடித்து விட்டாய் !

இன்னும் ஒரு வாரத்திற்கு "சண்டை "
ஓயாது போல !

எழுதியவர் : முபா (17-Aug-17, 4:22 pm)
பார்வை : 133

மேலே