சும்மா வருகிறது பணம்

யாழ் குடாநாட்டில் உள்ள சப்த (7) தீவுகளில் புங்குடுதீவும் ஓன்று. புங்குடுதீவு என்ற பெயர் தோன்றியமைக்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. அக்காலத்தில் புங்கை மரம் நிறைந்த காடாக இவ்விடம் இருந்தமையால் புங்குடுதீவு எனப் பெயர் பெற்றதாக கதைகள் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள ‘புங்குடி’ என்னும் ஊர்ப் பெயரை புங்குடுதீவுடன் தொடர்பு படுத்தி பெயர் விளக்கம் கூறப்படுவதுண்டு. மேலும் இசுலாமியரின் படையெடுப்பு தமிழகத்தில் ஏற்பட்டபோது அங்குள்ள பூங்குடி ஊரினர் படையெடுப்பாளர்களது கொடுமையில் இருந்து தமது கன்னிப் பெண்களை பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் இங்கு தப்பி ஓடிவந்து குடியேறியதால் இத்தீவுக்கு ‘பூங்கொடி’ ‘திருப்பூங்கொடி’ எனும் பெயர்களை பெற்றதாயிற்று. இந்த வகையில் பூங்கொடித் தீவு என வழங்கி அது காலப்போக்கில் புங்குடுதீவு என மருவியதாயிற்று
இத்தீவானது ஏனைய தீவுகளுக்கு நடுநிலையாகக் காணப்பட்டமையால் ஒல்லாந்தர் இதற்கு ‘மிடில்பேர்க்’ (Middleburg) எனப் பெயரிட்டனர். மேலும் ஒல்லாந்தரால் கடலில் குளித்தெடுத்த சங்குகளை கொண்டுவந்து பதம்பிரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இடமாகவும் இது அமைவு பெற்று விளங்குகிற்று. இதனால் இதற்கு சங்குமாவடி என்று பெயர் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இது போன்ற வரலாறு உள்ள தீவானது யாழ்ப்பானத்தில் இருந்து மேற்கே 30 கி மீ தூரத்தில் அமைந்துள்ளது. 12 வட்டாரங்களும், 17 ஊர்களையும் உள்ளடக்கிய தீவு. இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள்ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல் நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது. இத்தீவானது வேலணை வாணர் பாலத்தினால் இணைக்கப்பட்டதன் மூலம் இங்குவாழும் மக்கள் பெரும் பயனைப் பெற்றுள்ளார்கள். காரைதீவு எப்படி பாலத்தால் குடாநாட்டோடு இணைக்கபட்டபின் காரைநகர் எனப் பெயர் மாற்றம் பெற்றதோ அதே போல் புங்குடுதீவு தீவு சிலரால் புங்குநகர் என அழைக்கப்பட்டது.

15 பாடசாலைகள் இத்தீவில் இருப்பதால் பல தமிழ் அறிஞ்சர்கள் எழுத்தாளர்களும், கவிஞ்சர்களும் தோன்ற காரணமாக இருந்தது சுமார் இருபதாயிரம் மக்களைக் கொண்ட அத்தீவில் வாழ்பவர்கள் பலர் இந்து சமயவாதிசகள். இதற்கு அத்தீவில் உள்ள 21 கோவில்களே சான்று. இக்கோவில்களில் கண்ணகி அம்னை ஸ்ரீ ராஜாராஜேஸ்வரி அம்மன் கோவில் எனப் பெயர் மாற்றம் ஆறுமுக நாவலரால் செய்யப்பட்ட பிரசித்தமான கோவில்.

அத்தீவில் வாழும்’ மக்களில் குறிச்சிக் காடு வட்டாரத்தில் வாழும் பல குடும்பங்களில் சுப்பையா குடும்பமும் ஓன்று. அந்த வட்டாரத்துக்கு சுப்பையாவின் தந்தை செல்லையா ஒரு புகையிலை வியாபாரம் செய்த தொழில் அதிபர். அவரது ஒரே மகனுக்கு வேலனையில் வாழ்ந்த தனது இனத்தவரான் மாணிக்கத்தின் மூத்த மகள் செல்லம்மாவுக்கு நல்ல சீதனத்தோடு திருமணம் செய்து வைத்தார். சுப்பையா செல்லம்மா தம்பதிகளுக்கு சதீஸ், கணேஷ், மகேஷ் என்று மூன்று மகன்களும் கடைசி பிள்ளயான ஈஸ்வரி என்ற மகளும் இருந்தார்கள் அவர்கள் இரண்டு வருட இடைவேளியில் பிறந்தார்கள்.

தந்தை விட்டுச் சென்ற இருபது பரப்பு காணியில் சுப்பையா குடும்பம் நாலறைகள் உள்ள கல் வீட்டில் வாழ்ந்தது. அந்த வட்டாரத்தில் சுப்பையாவின் வீடே “பூங்கொடி வாசம்” என்ற பெயாரில் உள்ள பெரிய கல் வீடு என்று சொல்லலாம்.
பலர் போரின் நிமித்தம் புங்குடுதீவில் இருந்து வெளி நாடுகளுக்கு புலம் பெயந்தனர். வெளி நாட்டில் இருந்து வரும் பணம் வந்ததால பல கல வீடுகள் தோன்றின. தீவு சொர்கத் தீவாயிற்று. தீவின் கலாச்சாரமும் மாறத் தொடங்கியது.

பணம் வெளி நாட்டில் இருந்து வருவதால் சுப்பையாவின் மூன்று ஆண் பிள்ளைகளும் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டார்கள்/ தனது அரசியல் செல்வாகைப் பாவித்து ஏ லெவல் சித்தியடைந்த தன் மகள் ஈஸ்வரிக்கு உப தபால் அதிபராக நியமனம் சுப்பையர் வாங்கிக்க் கொடுத்தார். ஈஸ்வரி அதிகம் பெசமாட்டாள். கர்வம் உள்ளவள். அழகி என்று சொல்லமுடியாது.
ஊரில் குரிச்சிக்காடு சண்டியரகள் என ஊரால் அடைப் பெயர் வைத்து அழைக்கபட்ட ஈஸ்வரியின் அண்ணன்மார் மூவரும் செய்த குற்றங்கள் பல. விடுதலை புலிகள் அவர்களை தம் இயக்கத்தோடு சேர்த்து கொள்ள முயன்றும் முடியவில்லை. அதனால் அவர்கள் விடுதலை புலிகளுக்கு எதிரான ஒரு இயகத்தொடு ஒன்றிணைந்து, ஒற்றர்ளாக இயங்கினர். தீவில் உள்ள கடற்படை முகாமோடு தொடர்பு வைத்திருந்தனர். அதனால் போதை மருந்து, மதுபானம் அவர்களின் வியாபாரத்துக்குக் பாவனைக்கும் இலகுவில் அவர்களுக்கு கிடைத்தது
நேர்மையான் குணமுள்ள சுப்பையாவுக்கு மகன்மார்களின் போக்கு பிடிக்கவில்லை.
“தோலுக்கு மேல் என் மகன்கள் வளர்ந்து விட்டாங்கள் நான் சொல்லியா கேட்கப்போறாங்கள்” என்று கனடாவுக்கு பல வருடங்களுக்கு முன் கனடாவுக்குப் புலம் பெயர்ந்து, றியல் எஸ்ட்டேட் புரோக்ராக வேலை சைய்யும் தன் மைந்துனர் சிவபாலனுக்கு முறையிட்டார்

“ அத்தான் உவங்கள் மூன்று பெரும் ஒன்றாக இங்கு இருந்தால் தான் இந்த கேட்ட பெயர் உங்களுக்கு’ வருகுது, அவன் சதீஷ் குளப்படிக்காரன் என்றாலும் கார் மேச்கானிக் வேலை தெரிந்தவன், அவன் கணேஷ் உங்கடை லொரியை ஓட்டும் அனுபவம் உள்ளவன். அவன் மகேஷ், போதை மருந்துக்கு’ அடிமைப்பட்டவன் என்று என்னோடு படித்து, இங்கு உள்ள என் நண்பார்கள் எனக்குச். சொன்னார்கள். தீவு பாடசலை ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் என் நாண்பனின் சகோதரியோடு சேட்டை விடத் தெண்டித்திருக்கிறான் மகேஷ்,. நல்ல காலம் ஊர் ஜனங்கள் கண்டு, அவனுக்கு அடிபோட்டு எச்சரித்து அனுப்பி இருக்குறார்கள். அவனுக்கு ஏதாவது தொழில் ஒழுங்கு செய்து கொடுங்கோவன்?
““எனக்கு மகேசுக்கு நடந்தது தெரியும். எனக்’கு தலை காட்ட முடியவில்லை இன்கைபார் சிவா கொழும்பில் சேலை கடை வைதிருக்கும் எனக்குத் தெரிந்த ஒருவரிடம் வேலை ஒழுங்கு செய்து கொடுத்தனான். அவன் மகேஷ் போக மறுத்து விட்டான். நீ தான் அந்த’ போக்கட் பணமாக மாதம்’ பணம் அனுப்புகிறாய். அவர்கள் வேலை செய்யாமல் சும்மா இருந்து செலவு’ செய்து பழகி விட்டாங்கள். இனி அவங்களுக்கு பணம் அனுப்புவதை நிறுத்து.உனது சகோதரியும் மருமகள் ஈஸ்வரியும் நீ அனுப்பும் பணத்தில் விலை உயர்ந்த காஞ்சிபுரம் பட்டு புடவை உடுத்திக் கொண்டு ஆக்களுக்கு ஷோ காட்ட கோவிலுக்குப் போகுதுகள். சொன்னால் கேட்குதுகள் இல்லை” சுப்பையா முறைப்பட்டார்
:” அத்தான். நீங்கள் ஒன்றுக்கும் யோசிகதையுங்கோ. அவன்கள் மூவரையும்’ பிரித்தால் சரி. அவன் சதீசை கனடாவுக்கு கூப்பிட்டு எடுக்குறன். கணேஷை லண்டனிலை இருக்கும் என் தம்பி மூர்த்தியின் பொறுப்பில் அனுப்புகிறேன். காசை உங்களுக்கு மட்டும் அனுப்புகிறேன். நீங்கள் கோவில் , குளம், போரினால் பாதிக்கப்பட்ட போராளிகளின் குடும்பங்களுக்கு, அனாதை பிள்ளைகளுக்குக் கொடுங்கள். இது அரசியல் வாதிகளுக்குத் தெரியக்கூடாது. என்ன”:?
“சரி சிவா நீ சொன்ன படி செய்கிறேன். சும்மா பணம் வருவதால் தனே இந்த பெடியன்கள் வன்முறையிலும், போதை மருந்து எடுப்பதிலும் செலவு செய்கிரான்கள். அது மட்டுமே வாள் வெட்டு வீர்கள் குழுக்கள் வேறு உருவாகி சமூகத்தில் வன்முறைகளை செய்கிறார்கள்’. பெண்கள் இரவில் போவது’ கஷ்டம்” என்றார்’ சுப்பையர்
*******

வருடங்கள் இரண்டு சென்றது. சிவா சொன்னபடி பணம் தன் மருமகளுக்குகு அனுபுவதை நிறுத்தினர். கணேசை கனடாவுக்கும், சதீஷ்சை லண்டனுக்கும் புலம் பெயர வைத்தார். குரிச்சிக்காடு சண்டியரகள் குழு சிதைந்தது. தனித்து விடப்பட்ட மகேஷ் செய்வது தெரியாது இருந்தன். கையில் முன்போல் பணம் இல்லை. கொழும்பில் உள்ள சுப்பையாவின் நண்பரின் சேலை கடைக்கு சேல்ஸ்ம்னாக அனுப்பி வைத்தார். செல்லமாவும் ஈஸ்வரியும் கோவிலுக்கு பருத்திச் சேலை’ அணிந்து செல்ல ஆரம்பித்தனர். புங்கு நகரில் சும்மா பணம் ஊரில் உள்ள குடும்பங்களுக்கு வராததால் வன்முறை குறைந்தது.

(யாவும் கற்பனையே)

எழுதியவர் : ( பொன் குலேந்திரன்- கனடா) (17-Aug-17, 4:47 pm)
பார்வை : 328

மேலே