கெண்டை விழியினிலே

கெண்டை விழியினிலே
அம்பு விடுத்தனையோ
கம்பன் கவி மகளே
வம்பாய் வந்தனையோ
வீசும் உன்றன் பார்வையிலே
காதல் கணைதொடுத்து

காதல் தந்தனையோ
தூயவன் நெஞ்சினிலே
துள்ளி திரிபவளே
வாடும் நெஞ்சினிலே துயர் போக்க வந்தனையோ

பொன்னெழில் பூ மணமே
பூத்தாடும் பெண்ணெழிலில்
கோத்தாடும் கொடிமலரே
நித்தம் நெஞ்சினிலே தாழம்பூ வாசமடி

உன் இதய சிறையினிலே
கண்மூடி நானுறங்க
நீ தொட்டால் சிணுங்குமடி
பூவான என்னிதயம்
என்னிதயம் வென்றவளே
உன்னிதயம் தாருமடி

சுட்டும் விழிச்சுடரில் சுடராய் பொளிருமுந்தன் விழி
மடலாய் விழிவிரிய
கூடலாய் என் மனசு கொஞ்சி பேசுமடி

பருவம் பூத்திடும் நல் பருகும்
எழிலழகில் நதியாய் நெஞ்சினிலே
குதித்தோடும் குற்றாலமே
இசையாய் சலசலத்து
கீதமாய் தொடர்வேனடி

எழுதியவர் : சௌம்யா செல்வம் (17-Aug-17, 4:53 pm)
பார்வை : 126

மேலே