அழகாய் உறக்கம் விழிக்கும் அழகை பார்க்கும் வரம் வேண்டும்

நீ
அதிகாலை சோம்பல் முறித்து
அழகாய் உறக்கம் விழிக்கும்
அழகை பார்க்கும் வரம் வேண்டும்
எனக்கு !

அதிகாலை மொட்டவிழ்த்து
ரோஜா இதழ் விரிக்கும்
அழகை பார்த்து ரசிக்கும் அழகை விட
பேரின்பம் தருவதாய் அமையும்
என்பதினால் !

எழுதியவர் : முபா (17-Aug-17, 7:21 pm)
பார்வை : 434

மேலே