பெண்களின் நிலை

படிப்பறிவில்லா,
எழுத்தறிவில்லா,
மண் வாசனை மாறாத அவளொரு கிராமத்துப் பெண்.
மனதால் கூட வஞ்சம் நினைக்காத அவளொரு இனிய பெண்.
உழைப்பில் அவளென்றும் கெட்டி.
வீட்டில் விளக்கேற்றி வெளிச்சம் தந்து அடுப்பேற்றி உணவு சமைத்து பசி தீர்ப்பதில் அவளே ஈடுஇணையற்ற தாய்.

அவளின் உடலின் நிறம் கருப்புதான்..
மனதில் சிறிதும் கருப்பேறாதவள்..
கஷ்டங்களென்றால் அவளுக்கு இஷ்டம்..
எக்கஷ்டம் நேர்ந்தாலும் அதை மறைந்து வாழ்வாள்..
தன் விதியென்று கொள்வாள்..
அவளென்றும் பெண் தெய்வம்..

தெய்வத்தையே சோதிக்கும் சமுதாயத்தில் அவளென்ன விதிவிலக்கா?
வந்தான் ஒரு படித்த இளைஞன்...
காதலென்று அக்கன்னியை நம்பவைத்து களவாடினான் கற்பை...
கள்ளம், கபடமில்லா அப்பெண்ணும் அவனை நம்பியே தன்னைப் பறிகொடுத்தாள்...

நகர்ந்தன நாட்கள்...
வீங்கியது வயிறு...
உற்றார் உறவினரின் தூற்றலுக்கு ஆளான அப்பெண்ணின் தன் காதலனிடம் வேண்டினாள் தன்னைத் திருமணம் செய்ய..

விஷமமான அவன் மறுத்தான் அவளை,
படிப்பிலும், அழகிலும் அவளைவிட அழகான பெண் தனக்கு மனைவியாக வரப்போகிறாளென்று...

நஞ்சைக் காதலித்ததால் மனம் குமுறி தன் உயிரையே மாய்த்துக் கொண்டாள் அப்பெண்...

படித்த பெண்களிலும் பலருண்டு இதற்கு உதாரணமாக...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Aug-17, 8:45 pm)
Tanglish : pengalin nilai
பார்வை : 2498

மேலே