சகுந்தலை

சகுந்தலை -- இலக்கியச் சாரல்

முனிவர் விசுவாமித்திரருக்கும் தேவமங்கை
மேனகைக்கும் செல்வமகளாய் மண்ணுலகில்
அழகோவியமாய் வந்துதித்தாள் சகுந்தலை .
முனிவரின் தவத்திற்கு இடையூறாக வந்தவளோ
தாயானாள் முனிவரினால் ஈங்கே !

பெற்றெடுத்த மகளையோ காட்டினிலே தவிக்க
விட்டுவிட்டு தேவலோகம் செல்கின்றாள் மேனகை .
முனிவரும் கைவிடவே சகுந்தலை பிறக்கும் போதே
அனாதையாக தனித்து விடப்பட புள்ளினங்கள்
புடைசூழ கண்டெடுத்தார் கன்வ முனிவர் !!!

மாலினி ஆற்றின் கரையோரம் மதிமங்கை
முனிவர் ஆசிரமத்தில் வளர்க்கப் படுகின்றாள் !
மன்னன் துஷ்யந்தன் கானகத்தில் பயணித்தபோது
வனத்திலே இருந்த சகுந்தலை மேல் மோகம் கொள்ள
காதல் வயப்படுகின்றாள் தேவியும் மன்னன் மேல் !!

காந்தர்வ திருமணம் புரிந்து கொள்ள மௌனமே
சம்மதமாய் மாறிட இருமனம் ஒன்றிட தன் கையில்
இருந்த அரச மோதிரத்தை அடையாளச் சின்னமாய்
நங்கையிடம் அளித்து விட்டு அங்கிருந்து தன் நாடு
நோக்கிச் செல்கின்றான் மன்னவன் !!!

சாபத்தினால் மன்னவன் சகுந்தலையை மறந்துவிட
பரதனுக்கு தாயாகிறாள் சகுந்தலை . நீராடும் போது
மீனின் வாய்க்குள் முத்திரைமோதிரம் சென்றுவிட
நங்கை துடிதுடிக்க மீனவன் கண்டெடுக்க காளிதாசர்
இணைக்கின்றார் இருவரையும் வாழ்கவென்றே !!!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (17-Aug-17, 9:03 pm)
பார்வை : 466

மேலே