கருவாச்சி பக்கத்திலே

கருவாச்சி பக்கத்திலே
இளிச்சவாயன் நிக்கையிலே
காய்ச்சிருக்கும் மேனியிலே கள்ளெடுக்க வந்த புள்ள

பக்கத்திலே பார்த்திருக்க
ஏக்கத்திலே இளித்திருக்க
முறைச்சு வைச்சு பாக்கயிலே
மேயவிட்டு பாக்கறியே

ஏரியிலே தண்ணியில்லை
ஏத்தமும் தான் வேலை இல்லை
ஏறிபார்க்க ஆசை என்ன
வாரி இறைக்கும் ஆசையிலே
நான் வாரசந்தை மீனுதானா?

மேகமெல்லாம் மறைந்திடவே
வாழைகூட இறந்திடவே
உழவரெல்லாம் மடிந்திடவே
மாட்டுக்கெல்லாம் உணவுமில்லை
உச்சிமண்டை காயதடா

மானம் காக்க துப்புமில்லை
ஓட்டுக்கு பணத்தை வாங்கி
மதுவை தின்ன துப்பிருக்கே
கன்னிமேய மானமிருக்கே
நீயும் தலைகுனிந்த தமிழன் தானோ?

எழுதியவர் : சௌம்யா செல்வம் (18-Aug-17, 10:21 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 172

மேலே