மேகம் மறைத்த நிலவை பார்க்கும் ஆவல்

என் விழிகள் உன் முகம் தரிசிக்க
ஆவலாய் உள்ளது என்பது
உன் இதயத்திற்கு எப்படி தெரியும் !

என்னை கடந்து செல்லும்
அக்கண நொடிப்பொழுது
உன் முகத்திரை விலக்கி !
முழுமதியைப்போல் வெளிச்சம் !
வீசிப்போகிறாய் !


மேகம் மறைத்த நிலவை
பார்க்கும் ஆவல் இருக்கத்தானே
செய்யும் எனக்கு !

எழுதியவர் : முபா (18-Aug-17, 10:28 am)
பார்வை : 141

மேலே