சொல்லிவிடு

நகங்களை கடித்து சிலை போல்
நிற்கிறாள்
மௌனம் உடைத்து தத்தி தவிர
காதலை சொல்லியாகிவிட்டது- நீ
உண்டு என்றும் சொல்லவில்லை
இல்லை என்றும் சொல்லவில்லை
சுற்றி சுழலும் உன் கருவிழி
அவ்விடம் விட்டு நகர என்னை அனுமதிக்கவில்லை
காதலை மறுக்கவும் இல்லை
பெண்ணே!!
எலும்பு கூட்டுக்குள்
அகப்பட்டு இருக்கும்
என் இதயம் வெளி வந்து
விழுந்து
வெடித்து சிதறும் முன்
சொல்லி விடு நீ என்னை விரும்புகிறாய் என்று
அல்ல என்னை நகர்ந்து போகவது சொல்லிவிடு
காதலாவது பிழைத்து கொள்ளட்டும்!!

எழுதியவர் : A V அஜித் குமார் (18-Aug-17, 11:38 am)
சேர்த்தது : அவே அஜித்
Tanglish : sollividu
பார்வை : 164

மேலே