காலம் கடந்த உணர்வு

ஆறு மாதத்திற்குப்பின் அலுவலகத்தின் படியில் கால் வைத்தேன், மனம் பின் நோக்கி நகர்ந்தது.என்னுடைய உழைப்பால் உயர்ந்த என் நிறுவனம் இது. சிறந்த சாதனையாளர்க்கான விருது நான் வாங்குவதை பார்த்ததும் அப்பாவின் கண்ணில் இருந்து நீர் வந்தது இன்னும் நியாபகம் இருக்கு . அப்படி இருந்த எனக்கு இந்த ஆறு மாதம் என்னாச்சு ?

மரியா,, நேர்முக தேர்வில் எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினவள். புத்திசாலி , உழைப்பாளி என்றெல்லாம் அவளை பற்றி சொல்லலாம் . ரொம்ப சீக்கிரம் அவள் எங்கள் நிறுவனத்தின் முக்கியமான ஒருவள் ஆனாள் .

அப்பா .. எனது அப்பா,நல்ல அப்பா மட்டுமல்ல , நண்பனும் கூட .
" என்னடா உன்னையும் , மரியாவையும் பத்தி அலுவலகத்தில் ஏதேதோ பேசிக்குறாங்களாம் ,."
"என்ன பேசிக்கிறாங்க ?? நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல அப்பா . என் கனவு என்னனு உங்களுக்கு தெரியும்ல! ஒரு பெரிய பிசினஸ் மாக்னெட் ஆகணும் "

நாட்க்கள் நகர்ந்தன எனக்கு புரிந்தது என்னை பார்க்கும் மரியாவின் கண்ணில் ஒரு புதுவித வெளிச்சம் . அனால் அவள் என்னிடம் தன் காதலை சொல்லவில்லை . தெரிந்திருந்தும் நான் அதை வெளிக்காட்டவில்லை
.
காதல் .. அது அற்புதமான உணர்வு . மூடி வைத்தாலும் வெளியே வரும் வர்ணணிக்க இயலாத வெளிச்சம் . என்னையும் மீறி, என் கனவுகளையும் மீறி மனதுக்குள் நுழைந்துவிட்டாள்.. அனால் நான் மட்டும் அதை உணர தவறிவிட்டேன் .

உணர்ந்தேன் .. ஆம் காதலை உணர்ந்தேன் அனால் காலம் சென்றபின் . காலையில் அலுவலகம் சென்றதும் , எல்லோரும் பதட்டமாக இருந்தனர் . "என்னாச்சு ஏன் இன்னைக்கு ஒரே பதட்டமாக இருக்கீங்க ??என்று உதவியாளரிடம் வினவினேன்.
"சார் மரியாக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு , ரொம்ப சீரியஸ்னு சொன்னாங்க."
மனதில் எதோ பாரம் எறிய மாதிரி உணர்ந்தேன். தலை சுற்றுவது போல் தோன்றியது .உடனே வீட்டுக்கு பயணமானேன் .
என் இப்படி ? அப்போது தான் என் மனசாட்சி என்னிடம் சொல்லியது."அடேய் முட்டாள் ! நீ காதலிக்கிறாய் "என்று .

சற்று நேரத்தில் தொலைபேசி ஒலித்தது அம்மா எடுத்து பேசினார்.தொலைபேசியை வைத்துவிட்டு என்னிடம் வந்து சொன்னார் ," அப்பா கால் பண்ணி இருந்தார்ட , அந்த பொண்ணு மரியா தவறிட்டாளாம். "

இடியே விழுந்தமாதிரி ஒரு வலி மனதில் , கண்கள் நிரம்பி வழிய ஆரம்பித்தன . எனக்கு சுற்றும் நடக்கின்ற எதையும் உணர முடியாமல் தவித்தேன் .

இரண்டு நாட்களுக்கு பின் :

அப்பா : " என்னடா என்னாச்சு ?,இப்பலாம் ஆபீஸ்க்கு வர்றதே இல்ல."
நான் : "நான் காதலிக்கிறேன்பா "
அப்பா : "நல்ல விஷயம்ட .. யாருடா அந்த அதிர்ஷ்டக்காரி ?"
நான் : "மரியா !!"
அப்பா :"என்னடா சொல்ற ?"
நான் : " இப்போதான்ப்பா புரியுது நான் எவ்வளவு அவளை காதலிக்கிறேன்னு ."
அப்பா : "ஆனா அவ .."
நான் : "...."
அழுகை மட்டுமே என் பதிலாய் இருந்தது .

காலத்தால் மாற்ற முடியாதது எதுவும் இல்லை . அனால் என் மனது இன்னும் அவளையே தேடுகிறது .

எழுதியவர் : (19-Aug-17, 12:36 pm)
சேர்த்தது : Sarah14
பார்வை : 414

மேலே