காட்டின் மடியினிலே

சூரிய முகங்கங்கள்
ஊடுருவி விழுந்து கிடக்கும்
அடர்ந்த பிரபஞ்சம்..
மேகங்கள் அமர்ந்து ஓய்வெடுக்கும்
மலை முகடு..
தொலை தூரத்தில்
தரை தட்டும்
வெள்ளருவி சத்தம்..
பதில் பேச ஆளில்லை..
ஆனாலும் சலன மொழியில்
எதையோ பேசிக்கொண்டே ஓடும் நதி..
நுரையீரல் சிறைப்படுத்த
துடிக்கும் பெயர் தெரியாத பூவின் வாசம்..
தேனை திருடிக்குடித்த
பட்டாம்பூச்சிகளின் கால்களில் ஒட்டிய
மகரந்த சாட்சி..
திருவிழா கோலம்பூட்டும்
பறவைக் கூட்டங்கள்..
விலங்குகள் வாழும்
பச்சை சுவர் வீடு..
ஈரத்துணியால் தலைத்துவட்டும்
சில்லென்றக் காற்று..
மொத்தத்தில்
ஆதாம் ஏவால்
வாழ்ந்த சொர்க்க பூமி
காடு..

எழுதியவர் : ஆர்.சரண்யா (19-Aug-17, 7:21 pm)
Tanglish : kaattin madiyinile
பார்வை : 179

மேலே