ஞான மிதிவண்டி பந்தயம்

தனிமரமல்ல...
நானொரு தோப்பு...
ஞானமே என் காதலி...
அவளைப் பாடியே உயிர்க்கும் என் கவிதைகள்...
இப்போது சொல்லுங்கள்...
நான் யார்?

ஞானத்தின் காதலன்...
ஆம், ஞானத்தைக் காதலிப்பவன்...

என்னைக் கண்டு ஐயோ பரிதாபமென்பார் பலர்...
அவர்களின் நிலை கண்டு எனக்கும் அவர்களை நோக்கிச் சொல்ல வேண்டுமென்றே தோன்றுகிறது ஐயோ பரிதாபமென்று...

சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் மின் மோட்டாரில் தார்சாலையில் மட்டுமே பயணித்தால் பயணத்தின் ஞானம் பூர்த்தியாகுமோ?
இயற்கையின் உண்மையழகைக் காணவேண்டாமோ??

கல்லிலும், முள்ளிலும் நடந்துபார்...
செல்லும் பாதையிலே கவனம் வரும்...
காரணத்தை ஆராய்ந்துபார்...
கவனம் தந்த முள்ளுக்கும், கல்லுக்கும் நன்றி சொல்லு...

சவால்களை உருவாக்கு அன்பு கொண்டே நட்புகளுடன்...
அப்போதே ஏற்படாது என்றும் கசப்பு...
தோல்விகளை ஏற்றுக் கொள் புன்முறுவலோடு...
வெற்றியில் குதிக்காதே என்றும் தலைகால் புரியாது...
விட்டுக் கொடுத்துப் பார்...
அங்கு கிடைக்கும் ஆனந்தமே தனி...
அதை உணர்த்த வார்த்தைகளுக்கு சக்தி போதாது...

சரி.. சரி...
புத்திமதிகள் போதும்...
நீங்களெல்லாம் என்னுடன் ஞான மிதிவண்டி பந்தயம் வாரீங்களா இப்போது???

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Aug-17, 8:49 pm)
பார்வை : 249

மேலே