இத்தனை முறை எப்படி

ஓரே நாளில்
இத்தனை முறை
எப்படி பூக்கிறது
புன்னகைக்கிறது
உண் கண்கள்

உன் கண்கள் பூக்களை
உண்ணும் வண்டுகளா
இல்லை வண்டுகளை
உண்ணும் பூக்களா என்று
புரியாது தவிக்கிறது இயற்கை

சிமிழ் விளக்கினும் சிறப்பு
மிக்கது உன் கண்கள்

பகலிலும் இரவிலும்
உதிக்கும் இரட்டை
கதிரவன் உன்கண்கள்

யாரிடம் போர்செய்து
கொண்டு இருக்கிறது
உன் கண்கள் இப்படி
பார்வையால்

பளபளக்கும்
கண்ணாடிக்கும்
பொறாமைதான்
உன் கன்னங்களின் மீது

உன் கண்களும்
உன் இதழ்களும்
போட்டி போட்டு
பேச்சுபோட்டியில்
பேசாமலே எல்லா
தங்க பதக்கத்தையும்
வென்றுவிடுமடி

கண்ணாடியின் மீது
கண்ணடிக்கிறது என்று
புகார் கொடுக்காதே

உன் கண்களை பார்
உன் கண்கள் தானடி
கண்ணாடியை அடித்து
உடைக்க பார்க்கிறது

இது என்ன புது வித
மலரொன்று பூத்து
இருக்கிறது
உன் முகத்தில்
இதழ்களாய்

ஆ மற்றும் ஒரு ஆச்சரியம்
உனது இதழ்களுக்குள்
எப்படி இத்தனை
பறக்காத
வெண்வண்டுகள்

பூக்களை வண்டுகள்
சுவைக்கலாம்
வண்டுகளை பூக்களும்
சுவைக்கலாம்

ஆனால் உண் முகத்தில்
உள்ள பூக்களும்
வண்டுகளும்
இனைந்து கொண்டு
என்னை சிதைக்கிறதே
எப்படி?

என்னை கொலை செய்வது
என்று முடிவேத்து விட்டாய்
உனது கண்களாள
இல்லை
உனது கரங்களால
சொல்லிவிடு
துக்குதண்டனை கைதியாக
காத்தது இருக்கிறேன்

நான் தூக்கு தண்டனை
கைதி என்று என்னை
எண்ணிக்கொண்டு இருக்கையில்
ஆயள் தண்டனை தீர்ப்பளித்தது
ஆச்சர்ய படுத்துகிறாயே
எப்படி

நீ தலைசாய்த்து
இருந்த சுவர்கள்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
தலைசாயாது வாழும்
இனி இந்த பூமியினில்

நீ என்னை தூக்கலிட்டாலும்
பரவாயில்லை
உனது காதுமடலின்
கம்மலாக தூக்கலிடு

நீ என்னை கட்டி வைத்தாலும்
பரவாயில்லை உனது
கழுத்தில் மணிமாலையாக
காலம் காலமாக

எனக்கு ஒரு வரம் தா
அல்லது
சாபம் தா
ஆனால் அது உன்
கழுத்தில் மாலையிடுவதாய்
இருக்கவேண்டும்

என்னை குழந்தைபோல்
பார்த்து கொள்ளும் நீ
காட்டிகொள் முத்தமிடு
என்ற இரண்டு தண்டனைகளை
இன்னும் கடுமையாக்க
விடவேண்டுகிறேன்

தூக்கத்தில்
நீ என்னை சந்திக்கின்றாய
இல்லை தன்டிக்கின்றயா
கனவுகளாய்

விருந்துண்ண ஆசைதான்
நீ என்னை வேட்டையாடி
முடித்த பின்பு

கோட்டை கொத்தளங்களை
எல்லாம் அழைத்து கொண்டு
கூந்தலில் பூமுடித்து
எங்கே கிளம்பிவிட்டாய்
போருக்கா என்ன

உனது பெயர் என்ன வென்று
தானே கேட்டேன்
என் பீரங்கி கண்களை
தாக்குதலுக்கு தயார் செய்கிறாய்

அலங்காரம் செயது கொண்டு
அகங்காரமாய்
திரியும் அழகான
ஆயுதக்கிடங்கு நீ

வேட்டையாடும்
உன் கண்களை
எப்படி உன் வீட்டில்
கூண்டில் அடைக்காது
விட்டு விட்டார்கள்

மானே உன் கண்களை கண்டு
புலிகூட்டம் நடு நடுங்கும்
பூக்கள் கூட்டம் முனு முனுக்கும்

போர்க்களத்தில்
நீயும் நானும் போரிட்டோம்
எனது உயிரை
பறித்து கொன்று விடுவாய்
என்று தான் எண்ணினேன்
ஆனால் எனது உயிரை
பறிக்காது பெற்று
கொடுத்து விட்டாயே
பேரன்பு மிக்கவளே

காற்றில் காட்டுமிராண்டித்தனமாக
வேட்டையாடி போர் செய்யும்
உன்கண்களை
கொஞ்சம் நேரமாவது கட்டிவை
காற்று வேண்டிக்கொள்கிறது
என்னிடம்

புலிகள் வேட்டையாடி
பார்த்து இருக்கிறேன்
பூக்கள் வேட்டையாடுவதை
உன் கண்ணில்தான்
முதன்முறை
பார்த்து ரசிக்கிறேன்

எழுதியவர் : (20-Aug-17, 1:49 am)
பார்வை : 126

மேலே