நிலவு பாட்டு

கூதல் காற்றும் காதின் ஓரம் வீசியதே...
காதுக்குள்ளே உந்தன் வாசம் பேசியதே...

நிறங்கள் யாவும் மயங்கிப் போகும் நேரமிது...
இருவிழியில் சந்திரன் சங்கமிக்கும் வேளையிது...

வண்ணங்கள் ஒன்றையும் காணவில்லை...
கரும்போர்வைகள் போர்த்தியே உறங்கியதோ?

அலைகள் மோதும் நிலமகளை, கண்டு
விண்மீன் கண்கள் சிமிட்டியதோ?

மலைகள் மீதும் ஏறி நின்றேன்
எந்தன் நிலவே உன்னைத் தீண்டிடவே...

ஆனால் ஏனோ முடியவில்லை,
அதுவும் எதனால் தெரியவில்லை...

ஒவ்வொரு நாளும் தேய்கின்றாய்,
காணாமலும் நீ போகின்றாய்...

மீண்டும் பிறையாய் வளர்கின்றாய்,
முழுமதியாகி ஒளிர்கின்றாய்...

பூமியாக நான் நின்றிருப்பேன்,
உன்னைக் காண காத்திருப்பேன்...

முகில்கள் மூடிய வெண்ணிலவை,
ஒரு முத்தம் தந்தே சிறைபிடிப்பேன்...

என்னைக் காணவே வருகின்றாய்,
என்றே நானும் எண்ணிடுவேன்...

வருவாய் வருவாய் வெண்ணிலவே,
என் தலையணை ஆகி உறங்கிடவே....

எழுதியவர் : ரகுராம் ரத்தினம் (20-Aug-17, 11:34 am)
சேர்த்தது : ரகுராம் ரத்தினம்
Tanglish : nilavu paattu
பார்வை : 404

மேலே