என்னவள் முகம், நிலவே பொறாமைக்கொண்டது

இரவின் இருளை கிழித்து
வந்தது முழு நிலா ,பால் நிலவாய் ;
மேல்வானம் வந்தடைந்த நிலா,
மண்ணில் ஓர் தடாகத்தின்
தெளி நீரில் தன் முகத்தை கண்டு
தன் அழகில் தன்னையே மறந்து
மிக்க கர்வம் கொண்டது;
அப்போது தடாகத்தின் எதிரில்
அந்த மாடி வீட்டின் சாளரத்தில்
என்னவள் முகத்தை கண்டது
சற்றே அசர்ந்து போனது
இது என்ன மண்ணில் முளைத்த
அழகு, எனக்கெதிராய் வந்த
மண்ணிலவா என்று எண்ணி
மேகத்தின் பின்னே சென்று
வெட்கி, நாணி தன்னையே மறைத்துக்கொண்டது
வான் நிலவு.
அச்சோ, என்னவளே என்னென்று சொல்வேன்
உந்தன் அழகை ! அது அந்த
நிலவின் வதனத்தையும் தோற்கடித்ததோ!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Aug-17, 1:19 pm)
பார்வை : 157

மேலே