போர்க்களம் - 3

பாகம் 3

சமுத்திராவின் தங்கை மீனா ஒரு சிறந்த பாடகி. தினமும் காலையும் மாலையும் அருகில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று சிறந்த இறை பாடல்களை பாடி கடவுளை தொழுதுவிட்டு வருவது அவளது வழக்கம்.

அவ்வாறே இன்று மாலையும் அவள் கோயிலுக்கு சென்று திரும்பினாள். வழியில் நான்கு அரண்மனை காவலாளிகள் அவளை வழி மறைத்து உன் குரல் இனிமையாக உள்ளது என்று கூறினர். அதட்கு மீனா நன்றி என்று கூறிவிட்டு புறப்பட முட்பட்டால். ஆனால் அவர்கள் மீண்டும் வழி மறைத்து, உன் குரல் மட்டுமல்ல மற்ற அனைத்துமே நன்றாக இருக்கிறது என்று தகாத வார்த்தைகளால் அவளை கிண்டல் செய்தனர். கோபத்தில் மீனா அவர்களை தாக்க முயன்றால், ஆனால் அவர்களோ அவளை கையை பிடித்து சிலுமிசம் செய்தனர். அருகில் உள்ள மக்கள் அதை தடுக்க முட்பட்டபோது, அவர்களை கைது செய்து விடுவோம் என்று மிரட்டினர்.

செய்தியை அறிந்து சமுத்திரா கோபதோடு அவ்விடம் நோக்கி ஓடினான். அங்கே தன் தங்கையின் கையயை ஒருவன் பிடித்திருக்க மற்றவர்கள் அவளை சுற்றி வந்து கிண்டல் செய்து கொண்டிருந்தனர். அதை பார்த்து கோபம் கொண்ட சமுத்திரா, அவன் பெயருக்கு ஏற்றால்போல் அந்த நான்கு காவலாளிகளையும் சுற்றி வளைத்து தும்சம் செய்தான். மீனாவோ அவசரமாக ஓடிவந்து நடந்ததை அம்மாவிடமும் நண்பன் ப்ரித்விராஜிடமும் கூறினால். உடனே அனைவரும் பதட்டதோடு அவ்விடம் நோக்கி ஓடினர்.
அங்கே சென்று பார்த்தால் நான்கு காவலாளிகளும் மூச்சி பேச்சி இல்லாமல் கீழே விழுந்து கிடந்தனர், சமுத்திராவோ கோபத்தோடு ஒரு பாறையில் அமர்திருந்தான். பிறகு மூவரும் சேர்ந்து சமுத்திராவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

அடுத்த நாள் காலை, ஐம்பதட்கும் மேட்பட்ட காவலாளிகள் சமுத்திரா வீட்டை சுற்றி வளைத்தனர். பிறகு சமுத்திராவை கைது செய்தனர். காரணம் கேட்டால், நேற்று நடந்த சண்டையில் ஒரு காவலாளி பலத்த காயத்தால் உயிர் இழந்ததாகவும், மற்ற மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறினர். நடந்த உண்மையை எடுத்து கூறியும் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

சமுத்திராவை கைது செய்து கொண்டு செல்வதை கண்டு அவன் குடும்பம் மட்டுமில்லாது அக்கம் பக்கம் உள்ளவரும் மனம் வருந்தினர். தன் நண்பன் ப்ரித்விராஜிடம் என் குடும்பத்தை பார்த்துகொள் என்று வருத்ததுடன் கூறிவிட்டு சமுத்திரா விடை பெற்றான்.
நீங்கள் யாரும் கவலைப்படாதீர்கள், நாம் நாளை விசாரணையின் போது நடந்த உண்மையை மன்னரிடம் கூறினால் நமக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்று பிரித்விராஜ் கூறி தன் நண்பனின் தாயையும் தங்கையையும் சமாதானப்படுத்தினான்.
அடுத்த நாள் காலை விசாரணை தொடங்கியது. சமுத்திரா கைதியாக மன்னனின் முன்பு நிற்கவைக்கப்பட்டான். மக்களின் கூட்டத்தில் அவனின் அன்னை, தங்கை மற்றும் நண்பனும் நல்ல தீர்ப்புக்காக கடவுளை பிரயாசித்து கொண்டிருந்தனர்.

விசாரணை தொடங்கியது, இறந்த மனிதன் ஒரு அரசு காவலாளி என்பதால், விசாரணை ஒரு முகமாகவே நடந்தது. சமுத்திரா சொன்ன அனைத்து நியாயங்களும் மன்னரால் நிராகரிக்கப்பட்டது. அவனின் சொந்தங்களுக்கும் பேச அனுமதி மறுக்கப்பட்டது.

இறுதியில் சிந்து தீவின் புதிய சட்டப்படி சமுத்திராவுக்கு, மரண தண்டனைக்கு நிகரான தண்டனை வழங்கப்பட்டது. அச்சட்டதின் படி இன்று முதல் அவன் சிந்து தீவின் போர் வீரன், எதிரி நாட்டை நோக்கி போர் புரிந்து அவன் வீரத்தை மன்னர் முன் நிரூபிக்க வேண்டும்.

எழுதியவர் : (20-Aug-17, 1:32 pm)
சேர்த்தது : Selvakumar
பார்வை : 177

மேலே