நவீன ஆலயம் நீ

யார் வரைந்த ஓவியம் நீ
எந்த மொழியின் காவியம் நீ
நீ தரமான ஓவியமா
தர்க்கம் செய்யும் காவியமா

நாள் தோறும் தனக்குத்தானே
குடமுழக்கு செயது கொள்ளும்
நவீன ஆலயமா

காற்றுக்கு சுவாசம்
கொடுக்கும்
கற் சிலை நீ

கருவறையில் உயிர்காக்கும்
பொற்சிலையும் நீ

உன்னோடு சண்டையிட்ட
தோற்றுப்போன அனைத்தும்
பின் ஓவியமானது

தூரிகளையெல்லாம்
தொலைந்துதான் போகும்
நீ தூறல் மழையில்
நனைகின்ற போது

நீ துவைக்க வைத்த
ஆடைகள் அனைத்தும்
தூக்குத்தண்டனை
வழங்கிவிட்டாய் என்றே
புலம்பல் செய்கிறது

நீ உடுத்தி கொண்ட ஆடையோ
தேரோடு ஊர்வலம் செல்வதாய்
காற்றோடு தம்பட்டம் அடிக்கிறது

நீ துயில் கலைந்து
எழுகின்ற போதெல்லாம் தூக்கம்
தாங்காது தவிதவிக்கின்றது

வெட்டவெளிகளெல்லாம்
உன் விழிகளை காண
ஒவ்வொருநாளும்
உன் வீட்டின் முன்பு
விடியலளுக்காக தினம்தோறும்
காத்து கிடக்கின்றது

உன் வீட்டு அறை உன் அழகை
எப்படி தாக்கு பிடிகின்றதென்று
தெரியவில்லை எனக்கு

உன் வீட்டு கண்ணாடி எப்படி
உன் கண்களை சமாளிக்கிரதென்று
புரியவில்லை உனக்கு

நீ புத்தகம் படிப்பதாய்
சொல்கின்றாய்
புத்தகம் உன்னை
உன்னை படிக்கிறதென்று
தெரியாத உனக்கு உனக்கு

எழுதியவர் : (20-Aug-17, 7:45 pm)
Tanglish : naveena aalayam nee
பார்வை : 114

மேலே