நியாயமான குழப்பம்

புல்லாங்குழல் இசை சுமக்கும்
பூங்காற்றின் வாசம்.....
புரியாமல் காரணம் கண்டேன்....
பூப்பெண்ணே உன் சுவாசம் !!

படைத்ததே இருவருக்கோ
பாரை.....என்றெண்ணம்.....
பூங்காவின் புற்தரையில்
நீயும் நானும்......

உன்னோடு சேர்ந்து...
கனவுகள் கோர்த்து....
கட்டப்பட்ட நம்
காதல் கோட்டையின்
வசீகரம் கண்டு...அதன்
ருசிகரம் உணர்கையில்....

அந்நொடி வரையில்
அந்நாளைப் பௌர்ணமி
என்றெண்ணிய எனக்கு.....
எதேச்சையாகக் கிடைத்தது
அவ்வதிர்ச்சி.....
அத்தினம்,

அமாவாசை என்பதனை
வானம் பார்த்துணர்ந்தேன்....

"நெடுந்தூரத்தில் வெண்ணிலவு இல்லாமையால்....."

பௌர்ணமி எனக்குழப்பிய
காரணமும் உணர்ந்தேன்....

"தொடுந்தூரத்தில் பெண்ணிலவு இருப்பதனால்......"

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (21-Aug-17, 8:31 pm)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
பார்வை : 128

மேலே