மீ thinks

சென்று சேராப் படிமம்
சென்று சேராப் படிமம் ஒன்று இன்று காலையில் என்னைத் தாக்கிற்று.
சவரம் முடித்து விரல் நுனிகள் செய் நேர்த்தியைத் தடவிக் கொண்டிருந்தபோது,
கண்ணாடிக்குள்ளிருந்து பாய்ந்தது போல் அந்தப் படிமம் என்னைத் தாக்கிற்று
அதன் சிடுக்கையும் பின்னல் அழகையும் பிடிக்க என்னிடம் மொழி இல்லை.
அந்தரத்தில் பாயும் ஒளியை அணைக்க முன்னுவதுபோல்
பாய்ந்து சரிகிறது என் மனம்.
அதைக் கூறத் தெரியாது போனால் அது என்னைக் கொன்று விடும்
அதைக் கூறத் தெரிந்துவிட்டால் காலத்தின் கோலம் என்னை அழிக்கும்
சென்றடையாப் படிமங்களைச் சென்றடையச் செய்வதும்
சென்றடையச் செய்த பின் தற்காத்துக் கொள்வதும்
கூடி வரவில்லை
எனக்கு

















காற்றற்ற கோணம்

என் அலுவலகத்தில் எனக்கு மின் விசிறி இல்லை
இருப்பினும் கோப்புக்கள் திணிக்கப்பட்டிருக்கும்
அந்த அழுக்கு அலமாரியின் கண்ணாடிக்குள்
சாம்பல் நிழலாய்
இறுகும் குழம்பாய்
உருகும் உலோகமாய்
வெளியே வழியச் சுழன்று துடிக்கும்
விசிறியின் சிறை அழகுகளை
பார்க்கக் கிடைக்கும் கோணத்தில்
நான் மட்டுமே சதா
இருந்து கொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : vetri (22-Aug-17, 12:26 pm)
பார்வை : 43

மேலே