நாம் யார்

கண்ணுக்கு தெரியாத
உயிரினங்கள் ஏராளம்.
ஆனாலும் அறிவியல்
சொன்னால் நாம் ஏற்று கொள்கிறோம்!
நம் கண்களுக்கு பார்க்கும் தூரம்
மிக குறைவு!
கண்ணுக்கு எட்டாத தூரம்
அவன் உறைவிடம்.
காதுக்கு கேட்காத தூரம்
அவன் உறைவிடம்.
கண்களால் நாம் வெளியில் தேடும் அவன்
உண்மையில் வெளியில் இல்லை!
அவன் ஒவ்வொரு மனதிலும் இருக்கிறான்
ஒவ்வருக்குள்ளும் இருக்கிறான் !
தன்னை அறியாமல் வெளியில் தேடுகிறோம்!
தன்னை அறியாமல் தானே கெடுகின்றோம்!
உள்ளத்தின் உள்ளுக்குள் தேடி பாருங்கள் !
எண்ணத்தை நேராக்கி தேடி பாருங்கள்!
துன்பத்தின் கரை தாண்டி தேடி பாருங்கள் !
இன்பத்திலும் ஓர் நொடி தேடி பாருங்கள் !
அன்பை விதைத்து தேடி பாருங்கள் !
நல்ல பண்பை வளர்த்து தேடி பாருங்கள்!
செல்வத்தை ஓர் நொடி மறந்து தேடி பாருங்கள்!
தன்னை மறந்து ஓர் நொடி தேடி பாருங்கள்!
எங்கெங்கோ தேடுகிறோம் கிடக்கவில்லை !
நம் உள்ளத்தில் தேடினால் விடை கிடைக்கும் !
நம் கேள்விக்கு பதில் வெளியில் இல்லை!
உள்ளத்தில் நமக்கு தெளிவிருந்தால்
பதிலும் ஓர்நாள் கிடைக்க கூடும்!

எழுதியவர் : sai (23-Aug-17, 4:04 pm)
Tanglish : naam yaar
பார்வை : 112

மேலே