அகநானுறு 1, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

வண்டு படத் ததைந்த கண்ணி ஒண் கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறு கோட்டு யானைப் பொதினி யாங்கண்
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்
மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த
வேய் மருள் பணைத்தோள் நெகிழச் சேய் நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக
அழல் போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின்
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு
அறு நீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின்
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய
சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை
நாரில் முருங்கை நவிரல் வான் பூச்
சூரலங் கடு வளி எடுப்ப ஆருற்று
உடை திரைப் பிதிர்வில் பொங்கி முன்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?

Akanānūru 1, Māmoolanār, Pālai Thinai – What the heroine said to her friend, after the hero left to earn wealth
Did he forget his promise that he would
not leave, that he made to me in Pothini
hills, owned by the great benefactor Āvi,
a man like Murukan,
who owns elephants with broken tusks,
and fought good battles against warriors
wearing flower garlands swarmed by bees
and bravery anklets, riding on fine horses?

He said that we would be together like a
whetstone created with stones and glue by
a young worker. But, causing my arms,
like bamboo, to become thin, he went away
to earn gold jewels and wealth, passing
through forests where the sun’s rays are
like flame, the land is cracked, the
temperature is painfully hot, trees are
parched offering very little shade, fresh
springs are dried with no water, boulders
are hot, and even rice could pop in the heat.

Since there are no travelers, wayside
robbers are depressed, the wasteland is
dull, and the wilted white flowers from
the murungai trees are blown off by fierce,
loud, twisting winds, the land looking like
the fine sprays on top of the breaking waves
near the seashore.

Notes: Poet Māmoolanār has a reference of Āvi of Pothini Hills in poem 61. Tamil scholars Navalar Na. Mu. Venkatasamy Naattaar and Po. Ve. Somasundaranar interpret the words அறு கோட்டு யானை as ‘அறுத்து திருத்திய கோட்டினையுடைய’ – ‘elephant with broken and fixed tusks’. பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘உரு – அழகு எனினுமாம். இது ஒரு தமிழ்ச் சொல். உரு – உருவ என்று ஈறுதிரிந்தது என்பர் பழைய உரையாசிரியர்’. அகநானுறு 356 – சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் நாவினேனாகி.

Meanings: வண்டு பட – bees swarming, ததைந்த கண்ணி – crushed flower garland, dense flower garland, ஒண் கழல் – bright bravery anklets, உருவக் குதிரை – fine horses, beautiful horses, மழவர் ஓட்டிய – chased warriors, முருகன் நற்போர் நெடுவேள் ஆவி – Āvi is a great donor like Murukan, and fought good battles, அறு கோட்டு யானை – elephant with broken tusks, பொதினி யாங்கண் – in the Pothini mountains, Palani Mountains, சிறு காரோடன் – young whetstone maker, பயினொடு சேர்த்திய கல் போல் – like stone mixed with glue, பிரியலம் என்ற சொல் தாம் மறந்தனர் கொல்லோ – did he forget his words that he will not separate, தோழி – my friend, சிறந்த வேய் மருள் பணைத்தோள் நெகிழ – making fine bamboo-like thick arms to get thin, சேய் நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் – to bring back gold jewels and wealth from a distant country, நிலம் பக – earth cracking, அழல் போல் வெங்கதிர் – hot rays that are like flame, பைதறத் தெறுதலின் – because of the painful heat, நிழல் தேய்ந்து உலறிய மரத்த – trees dried out and do not offer any shade, அறை காய்பு – boulders are hot, அறு நீர்ப் பைஞ்சுனை – dried springs, ஆம் அறப் புலர்தலின் – since they dried without any water, உகு நெல் பொரியும் வெம்மைய – rice could pop if dropped, யாவரும் வழங்குநர் இன்மையின் – since there are nobody to travel, வௌவுநர் – robbers, those who seize, மடிய – depressed, சுரம் புல்லென்ற ஆற்ற – the wasteland became dull, அலங்கு சினை – swaying branches, நார் இல் முருங்கை – murungai trees without fiber, Moringa Oleifera, நவிரல் வான் பூ – white flowers that on the top, white flowers that are wilted, சூரலங் கடு வளி எடுப்ப – very fierce winds rise, ஆருற்று – with sounds, உடை திரை – breaking waves, பிதிர்வில் பொங்கி – flow like the fine spray, முன் கடல் போல் – like the front of the ocean, தோன்றல காடு – the forest appears, இறந்தோரே – the man who went

அகநானுறு

எழுதியவர் : (23-Aug-17, 4:22 pm)
பார்வை : 105

மேலே