அகநானுறு 2, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

கோழ் இலை வாழைக் கோள் முதிர் பெருங்குலை
ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின் மலைப்
பல் வேறு விலங்கும் எய்தும் நாட
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய
வெறுத்த ஏஎர் வேய் புரை பணைத் தோள்
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின் மாட்டு
இவளும் இனையள் ஆயின் தந்தை
அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை பைம்புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன
நெடு வெண் திங்களும் ஊர் கொண்டன்றே.

Akanānūru 2, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh man from the land where a naive
male monkey drinks water from a big
pond on an ancient boulder, not knowing
that it turned to aged liquor with ripe
bananas dropped from trees with lush leaves
and large clusters of fruits, and sweet
jackfruits that cannot be eaten in abundance
because of their excessive sweetness,
and stretches on a fragrant flower bed in
bliss, unable to climb a sandal tree on which
pepper vines grow,
as he experiences unexpected pleasures
which are attained by various animals!

Are expected pleasures rare to you?
The heart of my very beautiful friend with
thick arms runs toward you, unable to be
stopped. Such is her love. Her father has
appointed a guard to watch her. You can
come to her at night when he is tired and
not attentive. The vēngai trees surrounded by
verdant bushes have put out bright clusters of
flowers and the great white moon reigns full.

Notes: By describing an intoxicated monkey, the heroine implies that the hero is intoxicated with love. There is a subtle suggestion for him to come and marry the heroine. குறிஞ்சிப்பாட்டு 187-191 – பழு மிளகு உக்க பாறை நெடுஞ்சுனை முழு முதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தென புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின் நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல் நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்ச் சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள் கயிறு ஊர் பாணியின் தளரும்.

Meanings: கோழ் இலை – thick leaves, வாழைக் கோள் – clusters of banana fruits, முதிர் பெருங்குலை – mature large clusters, ஊழுறு தீங்கனி – ripened sweet fruits, உண்ணுநர்த் தடுத்த – stopping those who eat, சாரல் பலவின் – of jackfruit trees on the slopes, Artocarpus heterophyllus, சுளையொடு – with segments, ஊழ்படு பாறை – ancient boulders, நெடுஞ்சுனை – large spring, large pond, விளைந்த தேறல் – aged liquor, அறியாது உண்ட கடுவன் – male monkey that drank not knowing, அயலது – nearby, கறி வளர் – pepper vine growing, சாந்தம் ஏறல் செல்லாது – not climbing on the sandal tree, நறு வீ – fragrant flowers, அடுக்கத்து – on the mountain ranges, மகிழ்ந்து கண்படுக்கும் – sleeps happily, குறியா இன்பம் – unexpected pleasures, pleasures that are not indicated, எளிதின் – easily, நின் மலை – your mountain, பல் வேறு விலங்கும் – various animals, எய்தும் – attain, நாட – man from such country, குறித்த இன்பம் – expected pleasures, நினக்கெவன் அரிய – how it is difficult, வெறுத்த ஏஎர் – abundant beauty, வேய் புரை பணைத் தோள் – bamboo-like thick arms, நிறுப்ப – even when stopping, despite stopping, நில்லா நெஞ்சமொடு – with an unstoppable heart, நின் மாட்டு – because of you, இவளும் – she, இனையள் ஆயின் – since she has fallen in love, தந்தை அருங்கடிக் காவலர் – the guard her father appointed, சோர்பதன் ஒற்றி – when he is tired, கங்குல் வருதலும் உரியை – it will suit you to come at night, பைம் புதல் – verdant bushes, வேங்கையும் – kino trees, Pterocarpus marsupium, ஒள் இணர் – bright clusters, விரிந்தன – have opened, நெடு வெண் திங்களும் – large white moon also, ஊர் கொண்டன்றே – grew to be full

எழுதியவர் : (23-Aug-17, 4:25 pm)
பார்வை : 336

மேலே