தமிழ் பிரியம் எனக்கு

"தமிழ் "மேல் எனக்கு என்றுமே "பிரியம்" தான் !
தடையின்றி உன்னைப்பற்றி எழுத என்றும்
வார்த்தைகள் தருவதினால் !

"தமிழ்" மேல் எனக்கு என்றுமே "பிரியம்" தான்
என் தாய் முதன் முதலாய் எனக்கு ஊட்டி விட்ட
உணர்வு என்பதினால் !

"தமிழ்" மேல் எனக்கு என்றுமே "பிரியம் "தான்
இதழ்களில் உச்சரிக்கும்போதும் ! எழுதும்போதும்
இதயத்தில் இன்பத்தேன் சுரக்கும் என்பதினால் !

"தமிழ்" மேல் எனக்கு என்றுமே "பிரியம்" தான் !
"அழகு "என்ற சொல்லும் "தமிழ் "என்ற சொல்லும் மட்டுமே
அதிகமாய் உன்னை நினைவு படுத்தி செல்லும் என்பதினால் !

"தமிழ்" மேல் எனக்கு என்றுமே "பிரியம்" தான் !
தரணியில் என் உயிர் உள்ள வரையில்

"தமிழ்" மேல் கொண்ட நேசமும் ,பிரியமும் மாறாது
மறையாது !

தமிழ்" மேல் எனக்கு என்றுமே "பிரியம்" தான் !

எழுதியவர் : முபா (23-Aug-17, 4:30 pm)
பார்வை : 139

மேலே