என் காதலி

தங்கச்சிலையொன்று கண்டுகொண்டேன்
தங்கச்சிலையொன்று கண்டுகொண்டேன்,
என்று அங்கு சென்றேன் கண்டுகொண்டேன்
அது தங்கச்சிலை அன்று தங்க நிறம் கொண்ட
பெண் பாவை என்று கண்டபின்னே இப்பாவை
என் பாவை ஆனால் இன்பலோகம் வேறு நான்
தேடவேண்டாம் அது மண்ணிலே இங்கே
என் எதிரே இருக்கையிலே என்று நினைத்தேன்
அத்தருணம் அங்கு கரு வண்டு ஒன்று ரீங்காரம் செய்து
அப்பெண்பாவை விழிகளை தாமரை மலரென்று
எண்ணி மது உண்ண விரைவதைக் கண்டேன்
வண்டிடம் தூது சொல்லி அனுப்பினேன் இவ்வாறு ,
'வண்டே, கருவண்டே, அதோ அங்கு நிற்கும்
பெண் பாவையிடம் சொல்லிடுவாயா உனக்காக
உன் காதலுக்காய் ஏங்கும் உளம் ஒன்று உனக்காக
உன்னெதிரே வெகு அருகில் காத்திருக்க நீ கண்
திறந்து பார்த்து அவன் காதலை ஏற்றிடுவாயோ'
என்று .................................

இதைக்கேட்ட வண்டும் தூது சொன்னதோ
ஏதோ நான் அறியேன் , ஆனால் பெண்ணவள்
இப்போது சுவாசம் உண்டு சலனம் கொண்டு
நான் இருக்கும் திசை நோக்கி என்னை தன்
பரந்த இரு விழிகள் கொண்டு நோக்க ,
பரவசமடைந்து நான் அவ்விழிகளுக்கு
மனதால் தஞ்சம் அடைந்தேன் இப்போது
அவள் கள்ள விழிப்பு பார்வையால் சிரித்தாள்
சிரிப்பால்; என்னை சிறையில் அடைத்தாள்
தன் உள்ளச் சிறையில் ; இப்போது நான்
அவள் காதல் கைதி, காதலன் அவள் என்
காதலி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Aug-17, 5:53 pm)
Tanglish : en kathali
பார்வை : 144

மேலே