இரு சக்கர வாகனம்

இரு சக்கர வாகனம்
கவிதை by :கவிஞர் பூ.சுப்ரமணியன்

இருபது முதல் அறுபது
வயது உள்ளவர்கள்
அனைவரும் விரும்பும்
எளிய வாகனம்
இரு சக்கர வாகனம்

கரடு முரடு பாதையிலும்
துன்பமில்லாமல் போய்வர
இன்ப வாகனம் பஜாஜ்
பள்ளி மாணவர் முதல்
கல்லூரி மாணவர் வரை
கலகலப்பாக சென்று
வரும் வாகனம் பஜாஜ்

கருத்தொருமித்த காதலர்கள்
விருப்பமுடன் செல்லும்
இரு சக்கர வாகனம் பஜாஜ்
நேரம் தவறாமல்
நினைத்தபோது
விபத்து இல்லாமல்
விரைவாகச் செல்லும்
இரு சக்கர வாகனம் பஜாஜ்

பஜாஜில் சென்றால்
புயலும்
தென்றலாகத் தோன்றும்
காகிதப் பூக்களும் மணக்கும்

வீடு வரை சொந்தம்
வீதி வரை பந்தம்
காடு வரை பாசம்
கடைசி வரை பஜாஜ் !

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (23-Aug-17, 7:01 pm)
பார்வை : 478

மேலே