நன்றிகள்

எழுத்து இணைய உறவுகளுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எழுத்து என்னும் இந்த இணைய குடும்பத்தில் நான் இணைந்து இன்றோடு ஓரு வருடம் ஆகின்றது.


அதன் நினைவாக இன்று ஒரு கவிதையை சமர்ப்பிக்கின்றேன். இந்த வேளையில் என்னை இணையத்தில் சேர்த்துவிட்ட என் சகோதரர் அன்னை பிரியன் மணிகண்டன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் உறவுகளே....


இன்பமான இந்த உலகில்
இதயங்களிடம் இரக்கங்களை கேட்டு
இயங்க முடியாமல் தவிக்குமக்
இதயமாக நான் இருந்தேன்,

உள்ளம் என்ற ஒன்று
உருகி தவிக்கும் போது
உதிரத்தில உருகும்
துளிகள் எல்லாம்
துயரங்களை சேர்த்தது,

கண்ணீர் என்ற நதியில்
கடந்து செல்ல முடியாமல்
கவலைகளில் மூழ்கி
வாழ்ந்து வந்த நேரங்களில் கூட
கண்ணீர் மட்டுமே அதிகரித்தது,


கடந்து செல்ல தோனி
ஒன்றை இறைவனிடம் கேட்டு
நின்றேன்!
அதற்க்காக தோழன் ஒருவனை
தோற்றுவித்தான்!!,

தோழனாக வந்தவன்
தொந்தரவு என்று என்னை எண்ணாமல்
தொடர்ந்து வந்தான்!
என் வாழ்வில் ஒரு பயணமாக!!,

காலங்கள் எல்லாம் கண்ணீரில்
மூழ்க வைக்கும் போதெல்லாம்
கை கொடுத்து காப்பாற்றினான்!
அவனின் கைகளே
எனக்கு நம்மிக்கையாக அமைந்தது!!,

யாருடன் இணைய வேண்டும் என
தெரியாமல் இருந்த வேளையில்
இணையம் என்ற ஒரு உலகில்
என்னையும் இணைய வைக்க
முயற்ச்சித்தான்,

என் எண்ணமெல்லாம்
என்னவளாக இருந்தாள்!
அதை எழுதுவது மட்டுமே
நானாக இருந்தேன்!!,

நண்பன் உயர வேண்டும்
என்று உயராது உழைத்தான் ஒருவன்
அதற்காக
அவன் நாடினான்
தன் உடன் பிறந்தவனை,

வெற்றி என்ற படியில்
என் விரல்களையும்
கொண்டுசெல்ல வைத்தான்!
விடாமல் முயறச்சி என்ற ஒன்றை
மட்டுமே என் விழிகளுக்கு
காட்டினான்!!,

தோல்வி என்ற ஒன்றை மட்டுமே
தொன்று தொட்டு என்னுடன்
வந்த போது
வெற்றி என்ன ஒன்றை காட்டி
என்னையும் வியக்க வைத்தான்,

வலிகளில் என் மனம்
வாடும் நொடிகளில்
அதனை வரிகளாக மாற்ற வைத்தான்,


சமுகம் நம்மை
சாகடிக்கும் போதெல்லாம்
சமமாக ஏற்றுக் கொள்ள
நண்பன் இருந்தால்
அவனையே நான் நம்புவேன்
அவனையே கடவுள் என்று,

கடவுளிடம் மறைத்ததை கூட
என் நண்பனிடம் மறைத்ததில்லை
இருந்தும் இன்று
மறைக்க நினைக்கின்றேன்
என் நண்பனுக்கு சொல்லும்
நன்றிகளை...
...............................................................



நன்றியுடன் நண்பன்
பிரசாந்த் பிரியன்

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (23-Aug-17, 8:20 pm)
Tanglish : nanRikaL
பார்வை : 153

மேலே