கட்டுமரம் அல்ல நாங்கள்

பாரிய கடல் அலையில் துறக்காத
உயிர் சிறு தோட்டாகள் துளைத்து
பீறிட்டு இரத்தத்தில் எழுதிய தமிழ்
மீனவரின் சோகங்கள்.

கோழையாக பிறக்கவில்லை ஊன்
மறைந்த செங்குருதியின் ஒட்டத்தை
பர்வதம் பறைசாற்றும் துடுப்புப்
பிடித்த கை இரண்டும் வேல்பிடிக்க
சிறுகனம் போதாது.

உறக்கச் சொல் தமிழா வீரம் எங்கள்
பொதுவுடைமை என்று,இருளில் மூழ்கிய கடலை ஒளிக்கொண்டு
எழுப்புவோம் சரியும் எதிரியின் தலைகணம் யாவும்.

கரை ஒதுங்க கட்டுமரங்கள் அல்ல நாங்கள் ஆழிபேரலை நாங்கள் நீர்
அறிவாய தடம் இல்லாமல் போகும்
உன் மகாவம்சத்தின் எச்சங்கள்.

எழுதியவர் : சூர்யா.. மா (23-Aug-17, 8:58 pm)
பார்வை : 280

மேலே