களவாடிய பொழுதுகள்

ஒரு நிமிடம் உனைபார்க்க
பலமணி நேரம் காத்திருப்பேன்
நீ வரும் வழியெங்கும்-ஆம்
உன்னை பாத்திருந்த பொழுதுகளைவிட
உனக்காய் காத்திருந்த பொழுதுகளே அதிகம்....

உன்னோடு ஒரு நிமிடம்
பெசுவதக்கு பல முறை
பேசி பார்ப்பேன் - ஆம்
உன்னோடு பேசிய வார்த்தைகளைவிட
உன்னோடு பேச நினைத்து காற்றோடு
பேசிய வார்த்தைகளே அதிகம்.....

உன்முன் சென்றதைவிட
பல தருணங்களில் உன்
பின் தொடர்ந்ததே அதிகம்-ஆம்
இப்படி காலை முதல் மாலை வரை
உன்னோடு உறவாடிய பொழுதுகளைவிட
உன் நினைவோடு உறவாடிய பொழுதுகளே
அதிகமென்று நீ களவாடிய பொழுதுகள்
எனக்கே உறைகிறது.....



எழுதியவர் : பாலமுதன் ஆ (7-Aug-10, 8:02 am)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 760

மேலே