நம்ம ஊரு.. நல்ல ஊரு...


மாக்கான் வீடு... நாகூர் தாண்டா.....
சந்தன கூடு... நாகூர் தாண்டா.....
லந்து கொடுத்தா நாகூர் தாண்டா..
சந்து தெருவா நாகூர் தாண்டா..

கோதுமை கஞ்சி.... நாகூர் தாண்டா.....
காண்ட தண்ணி... நாகூர் தாண்டா.....
ஸ்பெஷலு புரோட்டா..நாகூர் தாண்டா.....
அதிலும் கொத்து புரோட்டா...நாகூர் தாண்டா.....

துப்பட்டி துணையெல்லாம்.. நாகூரில் தாண்டா..
வளையல் கடை லொள்ளு.. நாகூரில் தாண்டா..
சிங்கப்பூர் கடை தில்லு... நாகூரில் தாண்டா...
அஞ்சு ரூபாய்... பீப் பகோடா...நாகூரில் தாண்டா..

வாசமுள்ள பால்கோவா...நாகூர் தாண்டா.....
பாசமுள்ள பருத்திகொட்டை அல்வா... நாகூர் தாண்டா.....
தம்ம்மான தம்ருட்டு... நாகூரில் தாண்டா
குசும்பு குலாப்ஜாமுன் .. நாகூர் தாண்டா.....

கந்தூரி நடந்த.. நாகூர் தாண்டா.....
கலவரம் நடந்தாலும்... நாகூர் தாண்டா.....
தர்காக்கு பல கூட்டம்..நாகூர் தாண்டா.....
பி ஜெக்கும் சில கூட்டம் .. நாகூர் தாண்டா.....

குண்டா சோறு.... நாகூர் தாண்டா...
செம்சட்டி.... சோறும்..நாகூர் தாண்டா...
பாசன் செட்டு... நாகூர் தாண்டா...
பேஷன் செட்டும்... நாகூர் தாண்டா..

குஞ்சாலி மரைக்காயருக்கு தெருவுண்டு ... நாகூரில் தாண்டா..
கலிபா சாயபிற்க்கும் தெருவுண்டு... நாகூரில் தாண்டா..
புது மனைக்கும் தெருவுண்டு... நாகூரில் தாண்டா..
மாரியம்மன் கோயிலுக்கும் தெருவுண்டு... நாகூரில் தாண்டா..

கருப்பு புர்காவில்..வெள்ளை மனசு... நாகூர் தாண்டா..
வெள்ளை துப்பட்டியில் நல்ல மனசு....நாகூர் தாண்டா..
மங்காத்தா ... சுடிதார்... நாகூர் தாண்டா...
அம்பாசடர் காரில் பத்து பேரு ... நாகூர் தாண்டா..

ஆவுகொச்செனம்னு.. அதிசயிச்சா..நாகூர் தாண்டா...
நல்லாம...நல்லா ன்னு ..ம்ம்ம் போட்டா..நாகூர் தாண்டா..
யோசிச்சு வெடைச்சா... நாகூர் தாண்டா..
யோசிக்காம... நடிச்சா.. நாகூர் தாண்டா...

கைலி சட்டை யுநிபார்ம்.. நாகூர் தாண்டா..
கல்யாணத்துக்கு மட்டும் பேன்ட் போட்ட பல கூட்டம்... நாகூர் தாண்டா..
இவங்க உடுத்தும் கைலி, சட்டை மட்டும் வெள்ளை இல்லைடா..
இங்கே வாழும் மக்களின் மனசும் வெள்ளை தாண்டா...

எழுதியவர் : கலிபா sahib (7-Nov-11, 8:10 pm)
பார்வை : 816

மேலே