முடிவுறாத கதை

(இந்த நிகழ்வுகளை நான் சொல்லும் போது செல்பேசியில் பதிவு செய்த தோழர்கள் சதீஷ் குமார், ராஜ் குமார் ஆகியோருக்கு நன்றி)

அவ பயாலஜி குரூப், நான் கம்ப்யூட்டர் குரூப். மொதல்ல, பர்ஸ்ட்ல லெவன்த்ல ஒண்ணும் எங்களுக்கு அவ்வளவா பழக்கம் ஒண்ணும் இல்ல. பெறகு என் அம்மா தான் அவ பேர எங்கிட்ட சொன்னாங்க. அப்ப தான் அவ பேரு எனக்குத் தெரியும். அவ பேரு ------. அப்ப ஏதோ ஒரு விஷயத்துல அம்மா அவ பேர எனக்குச் சொன்னாங்க. அது என்னன்னு மறந்துருச்சி. பெறகு ஆனா அப்பவும் அவ ஃபேஸ் எனக்குத் தெரியாது. பெறகு ஆகஸ்ட் எட்டாந் தேதி மொத மொதலா என் லைஃப்லயே டூருக்குப் போனேன். ஸ்கூல் லைஃப்லயே அப்பதான் மொதல்ல டூருக்குப் போனேன். அதான் ஸ்கூல் லைஃப்லயே கடைசி டூர். அப்பதான் அவள நோட் பண்ணிணேன். நோட் பண்ணி பிறவு பசங்கள்ட்டயெல்லாம் சொன்னேன். நான் அவள்ட்ட டைரக்டா பேசினதேயில்ல. அவங்களே கெளப்பி விடத் தொடங்கிட்டாங்க. பெறகு ஒரு... ஜனவரி டைம்ல இந்த மேட்டரு டொல்த் மொத்தமா தெரியும், பாய்ஸ் கேர்ள்சுக்கு எல்லாம். பெறகு அங்க உள்ள கேர்ள்ஸ் எல்லாம் நான் போகும் போது அவ பேர சொல்லிக் கூப்பிட, பாய்ஸ் வந்து அவ போகும்போது என் பேர சொல்லிக் கூப்பிட அவங்க எல்லாரும் மாமா வேல பாத்தாங்க. க்ளாசே மாமா வேல பாத்துது. அப்பிடி கொஞ்சம் இன்டரஸ்டிங்கா போய்டிருந்துது. அவ வந்து என் களாஸ் சைடில போகும் போது பசங்க என் பேர சொல்லிக் கூப்டா சிரிச்சிட்டுப் போவா, கொஞ்சம் வெக்கப்பட்டுட்டு,அதெல்லாம் தெரியும்லா உங்களுக்கு. அதெல்லாம் உங்களுக்கெல்லாம் சொல்லித்தர வேண்டிய அவசியம் ஒண்ணும் இல்ல. அப்ப இது டீச்சர்சுக்கு எல்லாம் தெரியும். டீச்சர்ஸ்னா அப்ப அவளுக்கு கிளாஸ் மிஸ்னா பிஸிக்ஸ் மிஸ். அவங்களுக்குத் தெரியும். கெமிஸ்ட்ரி சாரு கடைசில அவரு மொதல்லயே தெரியுமாயிருக்கும், கடைசில தான் கேட்டாரு. பெறகு ஜனவரி, பிப்ரவரி டைம்லயெல்லாம் இப்படித்தான் போய்ட்டுருந்துது. ஆனா நான் ப்ரப்போஸ் ஒண்ணும் பண்ணலே. ஆனா, அப்ப இதுதான் ரோடுன்னா அவ ரோட்டுக்கு ஒரு சைட்ல போயிட்டுருக்கான்னா, நான் எங்கம்பெனியோட ரோட்டுக்க இன்னொரு சைட்ல போயிட்டுருப்பேன். பெறகு, அவங்க எல்லாம் ப்ரப்போஸ் பண்ணச் சொன்னாங்க, ஆனா நான் பண்ணல. பெறகு என்ன ஆச்சுன்னா, எக்ஸாம் டைம் வந்துருச்சு. பிப்ரவரி பத்தொன்பதாந் தேதி எங்களுக்கு அந்த ஸ்கூல்ல, க்ளாஸ்ல லாஸ்ட் நாள். அதாவது, அந்த எக்ஸாமுக்கு முன்னாடி கிளாஸ்ல லாஸ்ட் நாள். அப்ப பிஸிக்ஸ் மிஸ் அப்ப ஸ்கூல விட்டு வெளிய போறதா இருந்தாங்க. எல்லாருக்கும் கொண்டுபோய் லட்டு குடுக்கணும். அதுக்கும் நான்தான். என்ன செய்றது, போற எடமெல்லாம் அப்படித்தான் இருக்கு. அனுப்பி விட்டாங்க. அது நல்ல சான்ஸ் தான். ஏன்னா அவ கையில குடுத்தேன். அவ சிரிச்சா. அவ மட்டும் தான் சிரிச்ச கேர்ள்ஸ்லயே. பெறகும் அவள்ட்ட பேசவேயில்ல. அதே ரேஞ்சில தான் இருந்துது. பெறகு எக்ஸாம் தொடங்கின பெறகு பண்ணினா சில நேரம் ஏதாவது சிக்கலாவப் போவுதுன்னு அதனால நான் எதுவும் பண்ணல. பெறகு மார்ச் பத்தொன்பது சான்ஸ் கெடைக்கல எங்களுக்கு. எங்க ஸ்கூல் சார்பாக ------ காலேஜுக்கு எங்களக் கூட்டிட்டுப் போனாங்க, சும்மா விசிட் பண்றதுக்குன்னு, கடைசி நாளு. கடைசி நாள்னா எக்ஸாம்லாம் முடிச்சிட்டு பெறகு கூட்டிட்டுப் போனாங்க. பயாலஜி க்ரூப்புக்கு ரெண்டு நாள் பிந்தி எக்ஸாம் முடிஞ்சு. நாங்க அன்னைக்குத் தான் ஃபேர்வல் டே வச்சோம். கூட்டிட்டுப் போனாங்க. அவ வீடு கிட்ட இருக்கேதுனால அவ அப்படியே போய்ட்டா. பெறகு அன்னைக்கு வீட்டுக்குத் திரும்பி வந்தேன். அடுத்து ஒரு ஒரு நாள் கழிச்சு, அதுக்கு முன்னாடியே அவ ஒரு பொண்ணுக்கு ஆட்டோகிராப் குடுத்திருந்தா. அதிலயிருந்து ஃபோன் நம்பர் எடுத்தேன். பெறகு எக்ஸாம் முடிஞ்சு ரெண்டு நாள் கழிச்சு அவளுக்கு மெஸேஜ் அனுப்பினேன். சும்மா தான். பொதுவா தான் இருக்கும் மெஸேஜ் எல்லாம். பெறகு அவ எய்ம்ஸ் தெரியும்ல, அதில எக்ஸாம் எழுதப் போனா. அதுக்கு விஷ் அனுப்பினேன். அவ பாஸாவல்ல. பெறகு மூணாவதா ஏதோ மெஸேஜ் அனுப்பினேன். மூணு மெஸேஜுக்கும் ஒரு மாசமா ரிப்ளை வரல்ல. நான் அதை அப்டியே விட்டுட்டேன். ஏன்னா, எந்த விஷயம்னாலும் மூணு தடவை அட்டம்ட் பண்றது, வரல்லேன்னா தூக்கிப் போட்டுட்டு போயிரது. பெறகு ரிசல்ட் வந்தது என்னைக்கு? பதினாலாந் தேதி தான. மே பதினாலு. மே பதினஞ்சாந் தேதி அவள்ட்டயிருந்து எனக்கு மெஸேஜ் வந்துது. அந்த மெஸேஜ் வந்து என்னன்னா, மொதல்ல என்ன அனுப்பினான்னா, ஏதோவொரு பொண்ணுக்க பேரப் போட்டு, எப்பிடியிருக்கன்னு கேட்டு அனுப்பினா. எனக்கு கன்ப்யூசாச்சு. இவதான்னு தெரியும். இவ நல்லா வேலை காட்டுவா எங்கிட்ட. அதுனால நான் வந்து செமிகாலன், கமாவெல்லாம் போட்டு ஒரு மெஸேஜ் அனுப்பினேன் ரிப்ளைக்கு. பெறவு எனக்குத் திரும்ப ஒரு ரிப்ளை வந்துது எனக்கு. கொஞ்ச நேரம் அப்டியே போய்ட்டுருந்துது. கண்ணாமூச்சி காட்டுறது மாதிரி. பெறகு நான் கடைசியா பேரச் சொன்ன பிறகு சொன்னா எனக்க அப்பாவக் கண்டா எனக்குப் பயம். அதனால நான் லவ் பண்ண முடியாது. பெறகு கடைசில சரி அப்டின்னா விட்ருன்னு சொல்லிட்டு நான் அப்ப நிறுத்திட்டேன். பெறகு கடைசியா எனக்கு ஒரு டவுட்டு. நான் வந்து கடைசியா ஒரு மெஸேஜ் அனுப்பினேன். நீ வந்து எனக்க நம்பர்தான் இதுன்னு தெரிஞ்சுட்டு மெஸேஜ் அனுப்பினியா? இல்லேன்னா தெரியாம ஏதாவது கஸ்ல மெஸேஜ் அனுப்பினியா? ஏன்னா என் நம்பர் அவளுக்குத் தெரியாது நான் குடுக்கல. ஏன்னா கேர்ள்ஸ் யாருக்குமே, ரெண்டு பேருக்குத் தான் ஆட்டோ கிராப் குடுத்தேன் மொத்தத்துல. பெறகு அப்ப அவ ரிப்ளை அனுப்பினா. அந்த மெஸேஜுக்கு மூணு மணிநேரங் கழிச்சு ரிப்ளை அனுப்பினா. இப்ப என் அப்பா வீட்ல இருக்காரு. நான் மெஸேஜ் ஒண்ணும் அனுப்ப முடியாது. திங்கக்கிழம காலைல அனுப்லாம்னு. சனிக்கிழம ரொம்ப எக்ஸ்பெக்டேஷன்ல போச்சு. சனியில்ல, ஞாயித்துக்கிழம அப்படி எக்ஸ்பெக்டேஷன்ல போச்சு. திங்கக்கிழம காலைல. மெஸேஜ் வருது. அது ஒனக்க நம்பருன்னு தான் எனக்குத் தெரியும். சரி, பின்ன ஏன் வந்து நீ மொதல்லேயே எனக்குச் சொல்லல, ஏன் எனட்ட வெளயாட்டுக் காட்டினேன்னு கேட்டதுக்கு நான் ஒன்ன கொழப்பி விடுறதுக்கு ஆசப்பட்டேன். இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். பெறகு அந்த டென்ஷன்ல நான் என்ன செஞ்சேன்னா ப்ரப்போஸ் பண்ணிட்டேன். ஐ லவ் யூ, நீ என்ன லவ் பண்றேன்னா டைரக்டா ஆன்சர் பண்ணு. இப்ப எனக்க ஃபோன்ல பேலன்ஸ் இல்ல.எனக்கு ஒடனே ரிப்ளை வேணும். டைரக்டா ரிப்ளை வேணும்னு சொல்லிட்டு மெஸேஜ் அனுப்பினேன். அதுக்கு எனக்கு ரிப்ளை அனுப்பினா, இப்ப ஒன்னப்பத்தி எனக்கு அவ்வளவாத் தெரியாது. பின்ன எப்படி நான் ஏத்துகிட முடியும்னு சொல்லிட்டு ரிப்ளை அனுப்பினா. பெறகு அன்னைக்கு முழுசா என் ஃபோன்ல பேலன்ஸ் இல்லையில்லா. அவ வந்து ரெண்டு மூணு மெஸேஜ் அனுப்பினா. நார்மல் மெஸேஜ் தான். பெறகு அடுத்த நாள் காலைல என் அம்மா செல்லில அனுப்பினேன். அதிலயிருந்து வெளயாடத் தொடங்கினேன். அப்ப அவ வந்து கேட்டா, நான் ஒன்ன லவ் பண்றதெல்லாம் இருக்கட்டும். மொதல்ல நீ என் கேள்விக்கு பதில் சொல்லுன்னு. எங்கிட்ட எது ஒனக்குப் புடிச்சுருக்குன்னு கேட்டா. வழக்கம் போல பாய்ஸ் சொல்ற டயலாக் உண்டுல்லா, அழகு, அறிவு, அத நான் ரிப்ளை அனுப்பினேன். ஒடனே சொன்னா, நீ சொல்றத என்னால நம்ப முடியாது. பெறகு நான் மெஸேஜ் அனுப்பினேன். நான் சொல்றத நீ நம்புறியோ, நம்பாத போறியோ அதெல்லாம் எனக்குப் பிரச்சினையில்ல. நான் கேட்டதுக்கு ரிப்ளை அனுப்புன்னு. அவ அனுப்புன ரிப்ளை ரொம்ப வித்தியாசமா இருந்துது. I like you.But I won't believe you. இதில தான் எனக்கு கன்பியூஷனே ஸடார்ட் ஆச்சு. ஐ லவ் யூன்னு சொன்னதுக்கு ஒரு பொண்ணு ஐ லைக் யூன்னு அனுப்புனா என்ன அர்த்தம்? அப்ப தான் பிரச்சினை ஸ்டார்ட் ஆயிருச்சு. கடவுள் நம்பிக்கைல தான் பிரச்னை ஒண்ணு ஸ்டார்ட் ஆயிருச்சு. அவ அடுத்து மெஸேஜ் அனுப்புனா, நான் மனுஷங்கள நம்பமாட்டேன். கடவுள மட்டும் தான் நம்புவேன்னு. அப்ப தான் பிரச்சினை ஸ்டார்ட் ஆச்சு எனக்கு. பிறகு நான் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லன்னு அவள்ட்ட ஓப்பனா மெஸேஜ் அனுப்புனேன். அப்டி லைட்டா ரொம்ப காமனாத்தான் போய்ட்டுருந்துது. பெற கடைசில அன்னைக்கு சாயங்காலம் மெஸேஜ் அனுப்புனா, இப்ப எனக்க செல் அப்பாட்ட போவுது, அதுனால ஒனக்கு மெஸேஜ் அனுப்ப முடியாதுன்னு. நான் ஒரு ரெண்டு மாசம் சும்மா இருந்திருப்பேன். பெறகு கவுன்சலிங் போனேன். கவுன்சிலிங் போறதுக்கு முந்தின நாள் என்னன்னா, முந்தின நாளே போய்ட்டேன் அன்னைக்கு சென்னைக்கு. பதினொண்ணாந் தேதி கவுன்சலிங். பத்தாந் தேதி காலைல டிரெயின்ல டிராவல் பண்ணீட்டு இருந்தோம். காலைல அஞ்சு மணிக்குப் போல. டிரெயின்னா நாங்க டைரக்டா வாற டிரெயின் கெடைக்கல. அதனால கேரளால எல்லாம் சுத்திப் போற டிரெயின் அது. அப்ப காலைல அஞ்சு மணிக்குப் போல எனக்குப் பொழுது போவாம ஒரு மிஸ்டு கால் கொடுத்தேன் அவளுக்கு. அப்ப எனக்கு ஒய்னு மெஸேஜ் அனுப்பினா அவ. அப்ப நான் அவள்ட்ட சொன்னேன். நான் இப்ப கவுன்சலிங் போறேன். நீ எந்த காலேஜ் எடுக்கப் போறேன்னு. அவ வந்து என்னன்னா, ஊர்ல இருக்க காலேஜுன்னு சொன்ன எனட்ட. காலேஜுக்க பேரயும் சொன்னா. பெறகு நீ எப்டின்னு கேட்ட ஒடனே நான் சொன்னேன் கோயம்புத்தூர்ல ஏதாலது காலேஜ், ஏரோநாடிகல் எடுக்கலாம்னு இருக்கேன்னு. அப்போதைக்கு அவ்ளவு தான். பெறவு சாயங்காலம் இஷ்டத்துக்கு மெஸேஜ் அனுப்பினேன். ஒண்ணுக்கும் ரிப்ளையைக் காணலை. அடுத்த நாள் காலைல, காலைல இல்ல மத்தியனம் வரைக்கும் மெஸேஜ் வரல்ல. காலைல கவுன்சலிங் முடிச்சுட்டு மத்தியானம் வந்தேன். பெறவு ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு திரும்பவும் மெஸேஜ் அனுப்பினேன். அதுக்கு ஹூ ஆர் யூன்னு கேட்டு ரிப்ளை வந்துது. பெறகு நான் வந்து அதுக்குள்ள மறந்து போய்ட்டாளான்னு நெனச்சுட்டு ஹின்ட் மாதிரி குடுத்திட்டு இருந்தேன் திரும்பவும். பெறகு அங்கயிருந்து ரிப்ளை வந்துது, நான் டைரக்டா கேட்டுட்டேன், இன்னாரு இருக்காங்களா அங்கேன்னுட்டு. ஒடனே சொல்லிருந்து, இல்ல நான் அவ அண்ணன்னு. பெறகு நான் கேட்டன் ஒம் பேரென்னன்னுட்டு. அந்த மெஸேஜுக்கு நான் வந்து -------- , பி.இ செகண்ட் இயர் படிக்குறேன். பெறகு நான் அவன்ட்ட டைரக்டா கேட்டேன். தங்கச்சிக்க பேரென்ன. அவன் வரிசையா ஒம்பது பேர அனுப்பி விடுறான் எனக்கு. பெறகு என்ன ஆச்சுன்னா பெறகு நான் டைரக்டா கேட்டேன், ஒரு அப்பாவுக்கு இத்தனை பேரும் பொறந்தாங்களான்னு. பெறகு நான் திரும்பவும் கேட்டேன், ஒங் கூடப் பொறந்தவங்க யாரொல்லாம்னுட்டு. அவன் அதுக்கு ஒரு பேரச் சொன்னான். பெறகு ஒரு நாலு நாள் கழிச்சு எனக்குக் கொழப்பமாச்சு. ஏன்னா அவளுக்கு அண்ணன் இருக்குறது எனக்குத் தெரியாது. நான் நெனச்சேன், அவ தங்கச்சி தான் ஏதோ வெளாட்டு காட்டிட்டு இருக்கான்னுட்டு. பெறகு கடைசில திரும்பவும் அவ ஒரு நாளு லைன்ல வந்தா. அப்ப கேட்டேன், டைரக்டா அப்ப மெஸேஜ் அனுப்புனது யாரு? அவ சொன்னா எனக்க அண்ணன்னு. பெறகு போன மாசம் இருபத்தொன்பது --------- போயிருந்தேன். அப்ப பசங்க எல்லாம் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டுருந்தாங்க. ஒரு பொண்ணு எந்தக் காலேஜுல படிக்குதுன்னு சொல்லி கேட்டு சொல்றதுக்கு. நானும் அனுப்பினேன். அப்ப தான் பிரச்னை ஸ்டார்ட் ஆச்சு.நான் அனுப்பினதுக்கு ரொம்ப மோசமா நீ ஏன் அப்படிக் கேள்வி கேக்கன்னு கேட்டா. பெறவு ரொம்ப சூடாயிட்டு வார்த்தையெல்லாம். பெறவு இது தான் பாதையோட முடிவுன்னு சொல்லி நிறுத்திட்டேன் அப்டியே. அன்னைக்கு நிறுத்தினது. இங்க வந்து ஸ்டார்ட் ஆச்சு. அடுத்து காலேஜுக்கு வந்த மொதல் நாளு அவளுக்கு ஒரு மிஸ்டு கால் குடுத்தேன். அவ அண்ணன்ட்ட சொல்லிட்டா. அவன் எனக்கு போன் பண்ணி திட்டினான்.


(பின் குறிப்பு: இந்தக் கதையைப் படித்து முடித்த வாசகர்களுக்கு சில கேள்விகள்.
1. நீங்கள் இந்தப் பையனைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?
2. இது தான் இந்தக் கதையின் முடிவா?
3. இது இக்கதையின் முடிவு இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
4. இந்தக் கதையைப் பொறுத்த வரையில் அந்தப் பையனோ, பெண்ணோ எடுத்த முடிவுகளில் ஏதாவது ஒன்று தவறானதா? அவ்வாறெனில் ஏன்?)

எழுதியவர் : (8-Nov-11, 11:57 pm)
பார்வை : 1665

மேலே