பயணம் [சிறுகதை]





தண்டவாளங்கள் எப்போதும் பிரிவதுமில்லை,சேர்வதுமில்லை,
சிலசமயம் உறவுகளும் அப்படித்தான்,யாராவது நம்மிடம் அன்பு காட்டமாட்டார்களா,யாராவது நம்மை புரிந்துகொள்ள மாட்டார்களா,யாராவது நம்மை காதலிக்க மாட்டார்களா,யாராவது நமக்கு கரம்நீட்ட மாட்டார்களா,யாராவது நமக்காக கண்ணீர் சிந்தமாட்டார்களா,இந்த யாராவது,யாராவது,யாராவது என்ற வார்த்தை நம் வாழ்நாள் முழுக்க நம்மை விட்டு பிரியாது,யாரும் யாரிடமும் எதையும் புரிந்துகொள்வதுமில்லை,யாரும் யாருக்கும் எதையும் புரியவைப்பதுமில்லை,அப்படித்தான் என் தம்பியும்.உடலாலும்,உருவத்தாலும்,எங்களை பிரிந்தே இருக்கிறான்,உணர்வாலும்,நினைவாலும்,எங்களோடு சேர்ந்தே இருக்கிறான்.வாழ்நாள்முழுக்க நிறைய விஷயங்கள் நம்மை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.யார் எதற்கு நம்மோடு பிறந்தார்கள்,எதற்கு அவர்களை காலம் நமக்கு அறிமுகம் செய்தது,ஏன் இந்த பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டார்கள்,என்ற எந்த கேள்விக்கும்,எந்த மனிதனிடமும் பதில் இல்லை,இப்படி பதில் இல்லாத கேள்விகளோடு வாழ்ந்து திரியும் நாடோடிக் கூடத்தில் நானும் ஒருவன்,
ஒவ்வொரு தீபாவளிக்கும் தவறாமல் ஊருக்குசென்றுவிடுவேன்,ஏனென்றால் என்தம்பி ஒரு தீபாவளி பண்டிகையின் போதுதான் சாலைவிபத்து ஒன்றில் இறந்துபோனான்,அதிலிருந்து தீபாவளி என்றாலே அம்மா அப்பாவிற்கு பயம்,எனக்கும்கூட அந்தபயம் காலப்போக்கில் தொற்றிக்கொண்டது, இனி அம்மாவிற்கு நான் ஒரே மகன் தான் என்பதை ஒவ்வொரு தொலைபேசி உரையாடலிலும் தம்பியின் மரணத்தை நியாபகப்படுத்தி மெல்ல மெல்ல என்னை பயத்தின் அருகில் கொண்டுபோய் நிறுத்திவிட்டாள் அம்மா,நான் தீபாவளியை கொண்டாட ஊருக்கு போகவில்லை,இந்த தீபாவளியில் நாம் எல்லோரும் நல்லா இருக்கோம்,உயிருடன் இருக்கிறோம்,என்று எங்களை சமாதானப்படுத்திக் கொள்ளவும்,தம்பி இல்லை என்ற கசப்பான அந்தநாளை நினைவுகூர்ந்து,தம்பியின் நினைவுகளை நினைத்து அழுது ஆதங்கப்படவுமான நாள்தான் எங்கள் தீபாவளி,உங்களுக்கு நரகாசூரனை கொன்றநாள் தீபாவளி,எங்களுக்கு எங்கள் நிம்மதியை கொன்றநாள் இந்த தீபாவளி,
அன்றும் அப்படித்தான் கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் வெகுநேரமாய் நின்றிருந்தும் எல்லா பேருந்துகளும் நிரம்பி வழிந்தே சென்றன,கடைசியாய் ஒரு பேருந்தில் சென்று நடத்துனரிடம் சார் ஒரு விருதாச்சலம் வரலாமா என்று கேட்டேன்,அது எங்கள் ஊர் வழியாக ஜெயங்கொண்டம் போகும் பேருந்து ,தம்பி உட்கார இடமில்லை என்றார்,பரவாயில்லை சார் நான் நின்றுகொள்கிறேன் என்றேன்,உட்காரும் இடமெல்லாம் எப்போதோ நிரம்பிவிட்டது,நீ நின்னுகிறேன்னு சொன்ன இடத்திலும் ஆட்கள் உட்காந்து இருக்கிறார்கள் என்று சொன்னார்,எனக்கு மெல்லத்தான் புரியுது நிக்கக்கூட இடமில்லை என்பதைத்தான் அப்படிசொன்னார் என்று,ஆனாலும் நான் எப்படியாவது ஊருக்கு போயாகவேண்டும்,உடனே ஒரு ஆட்டோபிடித்து எழும்பூர் ரயில்நிலையம் சென்றேன்,அங்கு டிக்கெட் எடுக்கும் கூட்டத்தை பார்த்தால் நான் தீபாவளிக்கு மறுநாள்தான் ஊருக்கு போவேனென்று தோன்றியது,இருந்தாலும் வரிசையின்முன் யாராவது நம் ஊர்காரர் இருக்கமாட்டாரா என்று பார்த்துக்கொண்டே முன்னேசென்றேன்,டிக்கெட்கௌண்டரில் கைவிட்டபடி ஒரு வயதானவர் சண்டைபோட்டுக் கொண்டிருந்தார்,அருகில் சென்றால் ஆயிரம் ரூபாய்க்கு சில்லரைமாற்றிக் கொண்டுவரசொல்கிறார் அந்த அதிகாரி,ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை மாற்றிக்கொண்டு மீண்டும் இந்த வரிசயில்நின்று இவர் எத்தனையாவது தீபாவளிக்கு ஊருக்கு போவார்,மெல்ல அவர் அருகில் சென்று,இருநூறு ரூபாய்கொடுத்து எனக்கு ஒரு விருதாச்சலம் டிக்கெட் எடுத்துதருவீங்களா என்று கேட்டேன்,குடு தம்பி நம்பஊருபுள்ள என்றார்,டிக்கெட் வாங்கிவந்தவர் தன்னை வெங்கடாலம் என்றும்,ஊர் கூறப்பேட்டை என்றும் அறிமுகப் படுத்திக்கொண்டார்,பேசிக்கொண்டே நடந்தோம்,ராமேஸ்வரம் வண்டி புறப்பட தயாராக இருந்தது,எப்போது ரயில் பயணமானாலும்,சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு,முதல்,இரண்டாம் வகுப்புப்பெட்டியில் ஏறிக்கொள்வேன்,இடமிருந்தால் உட்கார்ந்துக்கொண்டு,TTR யிடம் அந்த வகுப்புக்கான கட்டணத்தை செலுத்திவிடுவேன்,ஆனால் இன்று அதற்க்கெல்லாம் வாய்ப்பே இல்லை,பெரியவர்வேறு தம்பி நான்போய் சில்லறை வந்கிவரவா என்றார்,அதெல்லாம் போகும்வழியில் விழுப்புரத்தில் வாங்கிக்கொள்ளலாம் வாங்க என்று அழைத்துக்கொண்டு கடைகோடியில் இருக்கும் மூன்றாம்வகுப்பு பெட்டிக்கு சென்றேன்,அங்கே எறும்புகள் ஊர்ந்து செல்வதர்க்குதான் பாதை இருந்தது,ஆனால் வேறு வழியும் இல்லை,அய்யா ஏறுங்கள் எப்படியாவது உள்ளேசென்றுவிட்டால் கக்கூஸ் ஓரமாக நின்றுகொள்ளலாம் என்றேன்,பயணியில் ஒருவன் சார் கக்கூஸ் உள்ளேயே ஆள் நிக்குறான் என்றான்,பெரியவர் கையை பிடித்து இழுத்துக்கொண்டு நெரிசலில் புகுந்து,உடலை குறுக்கி,மூச்சை இருக்கி,பாதத்தால் தரையை தடவித் தடவி,ஓரிடத்தில் நின்று கொண்டோம்,அப்போது பெரியவர் சொன்னார்'' தம்பி எக்காரணம் கொண்டும் கால்களை மேலே தூக்கிவிடாதே மீண்டும் காலை கீழே வைக்கமுடியாது என்று,ஆனால் அது போக போக உண்மையாய் போய் வெகுநேரம் ஒற்றைக்காலில் நின்றுவந்தேன்,அந்தபெட்டியில் நெரிசலில் மூச்சி விட முடியாமல் மேல்நோக்கி முகம் உயர்த்தி உஷ்ணத்தை வெளியேற்றும் பயணிகளை பார்க்கையில் கடலுக்குள் வெகுநேரம் மூச்சடக்கி முத்துகுளிப்பவன்தான் நினைவுக்கு வருவான்,
வண்டி மெல்லஊர்ந்து தாம்பரம் வந்துசேர்ந்தது,அங்கேஒரு கூட்டம் திபு திபுவென திரண்டுவருவதை பார்த்ததும் பெரியவர் தம்பிநாம இங்கேயே இறங்கிடுவோமா என்றார் ஆனால் அது நடக்காது,நாங்கள் பெட்டியின் நடுவில் நின்றுக்கொண்டு இருக்கிறோம்,வாசல் அருகில் செல்வதற்குள் வண்டி புறப்பட்டு விடுமென்றேன்,இடையில் செல்போன் வேறு அடித்துக்கொண்டே இருக்கிறது,அம்மாவாகத்தான் இருக்கும் ஆனால் பேன்ட்பாக்கெட்டில் இருக்கும் போனைஎடுத்து பதில் சொல்ல இயலாது,உட்கார இடம்கிடைத்ததும் அம்மாவிற்கு போன்செய்து நான்வரும் தகவலை சொல்லவேண்டும்,பெரியவர் மிகவும் அவதிப்படுவதை பார்த்து மேல்இருக்கயில் உட்கார்ந்திருக்கும் ஓர் இளைஞர் அவர் அருகில் நெருக்கி உட்க்கார்ந்துகொள்ளலாம் என்று அழைத்தார்,அந்த நெரிசலில் பெரியவரை மேலே ஏற்றிவிடுவதற்கு பட்ட அவஸ்த்தையை வார்த்தையால் சொல்ல முடியாது,பெரியவர் மேலே ஏறும்போது கீழ்இருக்கயில் உட்கார்ந்திருந்த ஒரு நாகரீகதோற்றமும்,குடும்பப்பாங்கான முகமும்கொண்ட பெண்ணின்மீது கால் பட்டுவிட்டது,ஆனால் நான்சொன்ன தோற்றத்திற்கும் அவர் பெரியவரை வசைபாடிய விதத்திற்கும் துளிகூட சம்பந்தமில்லை,அப்படி ஒரு வார்த்தையை அவர்மீது வாரி இறைத்தார்,பெரியவரோ தெரியாமல் பட்டுவிட்டது என்று மன்னிப்பும் கேட்டார் அனாலும் அந்தப்பெண் விடுவதாய் இல்லை,அவருக்கு என்ன பிரச்சனையோ,யார்மீது கோபமோ தெரியவில்லை இந்த பெரியவர் மாட்டிக்கொண்டார்,எனக்கு அவரை பார்க்கவே பாவமாக இருந்தது,கூட்டமான இடங்களில் அதுவும் இந்தமாதிரி பண்டிகை நாட்களில்,மூன்றாம் வகுப்பு பெட்டியில் இதுமாதிரி நடப்பது சகஜம்தான்,இருந்தாலும் வயதிற்கு ஒரு மரியாதை வேண்டாமா,மனிதாபிமானம் மருத்துப்போகும் இடங்களிலெல்லாம் மனசு கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது,வண்டி செங்கல்பட்டை நெருங்கும்போதே சிலர் இருக்கைவிட்டு எழத்துவங்கினர்,நடுத்தர வயது பெண்னொருவர் நான் இங்கே இறங்கப்போகிறேன் நீங்கள் உட்காருங்கள் என்று எனக்கு இடம் கொடுத்தார்,காலத்தின் கோலம் இதுதானா,காலியான இருக்கை அந்த நாகரீகப்பெண்ணின் எதிர் இருக்கை,ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்த உடன் அம்மாவிற்கு போன்செய்து நான் வரும் தகவலைச் சொன்னேன்,ஜன்னலுக்கு வெளியில் இருந்து வண்டிக்கு உள்ளே அவள்மீதுபடாமல் என்பார்வை பயணிக்கவே இல்லை, அலைந்துகொண்டிருந்த என்பார்வையை ஒருநிமிடம் அவள்மீது கொண்டுபோய் நிறுத்தினேன்,பாடல் கேட்டபடியும்,செல்போனில் உரையாடியபடியும்,புத்தகம் படித்தபடியும்,தனக்கான காட்சிகளை மாற்றிக்கொண்டிருந்தவள்,ஒருகாலின் மீது ஒருகாலை பரிமாற்றம் செய்தபடி இருந்தாள்,ஒருமுறை பரிமாறிய கால்கள் என்மீது பட்டுவிடவே பதட்டம் ஏதுமின்றி 'சாரி' என்று சொல்லிவிட்டு தன் வேலையை தொடரும் அந்தபெண்ணிடம் சொன்னேன்,இதைத்தானே அந்த பெரியவரும் சொன்னார் என்று,பதில் சொல்லமுடியாமல் திகைத்தபடி உட்கார்ந்திருந்த அந்தப்பெண் அதன்பிறகு அடித்துக்கொண்டிருந்த அவள் செல்போனை கூட எடுக்கவில்லை,
செங்கல்பட்டில் வண்டி நின்றதும் தலையில் கூடைசுமந்தபடி ஓர் கிழவி ஊர்ந்துவருகிறாள்,ரவிக்கை இல்லாமல் புடவைகட்டி,தோல்கள்சுருங்கி,காதுகள் நீண்டு தோள்களில் உரசியபடி வரும் அவள் கண்டிப்பாய் காதில் கிலோகணக்கில் தங்கத்தோடு அணிந்தவளாய்தான் இருக்கவேண்டும்,என்ன கொடுமையோ கொய்யாபழம் விற்கிறாள்,ஒவ்வொரு பழமும் மஞ்சளும்,பச்சையும் கலந்த நிறத்தில்,இரண்டு கைகளையும் சேர்த்து ஓர் உருண்டை பிடித்தால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கான பழங்கள்,25 ரூபாய்க்கு தண்ணீரும்,பெப்சி,கோலா என எதை எதையோ விலைபேசாமல் வாங்கி குடிப்பவர்கள், 5 ரூபாய் கொய்யாபழத்தை 4 ரூபாய்க்கும்,3 ரூபாய்க்கும் விலை பேசுகின்றனர்,தள்ளாத வயதில் அந்த கிழவி நடையான நடை நடந்தும்,கூவியும் ஒருபழம் கூட வித்தபாடில்லை,கடைசியாய் என்அருகில் வந்தவள் ஒருபழத்தை எடுத்து சிறுகத்தியால் நான்கு துண்டுகளாய் வெட்டி இடையில் கொஞ்சம் மிளகாப்பொடி வைத்து தம்பி இந்தா இதை தின்னுபார் நல்லாருந்தா காசுதா இல்லாட்டி வேண்டாம் என்றாள், வாங்கி ஒருதுண்டை கடித்ததுமே அப்படியோரு சுவை,நான் கொய்யாப்பழத்தை புதிதாய் தின்னவில்லை ஆனாலும் இந்தபழம் புதுசு,எனக்கு அந்த கிழவியை பார்த்தால் பாவமாக இருந்தது,எல்லாபழத்தயும் நானே வாங்கிக்கலாம் என்றுகூட தோன்றியது,ஆனால் என்ன செய்ய நான் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே நாலுபழம் வாங்கிவிட்டேனே,ஆனாலும் இந்த பழங்களை எப்படியாவது வித்து கொடுக்கணும் என்று தோன்றியது,நம் மக்களுக்கு ஒரு பழக்கம் உண்டு,எந்த ஒரு நல்ல பொருளானாலும்,கெட்ட பொருளானாலும் யாராவது நாலுபேர் வாங்குனாத்தான் வாங்குவான்,அது பஞ்சி முட்டாயில் இருந்து,பால்டாயில் வரை பொருந்தும்,அந்த கொய்யாப்பழத்தை வாங்கி என் தலைமாட்டில் உட்கார்ந்திருக்கும் வெங்கடாலம் பெரியவரிடம் ஒருதுண்டும்,அருகில் உட்காந்திருந்த பெண்மணிக்கு ஒருதுண்டும் கொடுத்தேன்,அவர் கையில் வைத்திருந்த குழந்தை ஹய்யா,கொய்யாபழம் எனக்கு என்றாள்,அவளிடம் ஒருதுண்டை கொடுத்தேன் வாங்கிக்கொண்டு மாமாவென்று என்மடியில் வந்து உட்கார்ந்துகொண்டாள்,கொய்யாபழம் தெரியுமாஉனக்கு என்றேன்,ஓ தெரியுமே என் புத்தகத்தில் இருக்கு என்றாள்,ஆமாம் ஆமாம் இனி கொய்யாபழத்தை புத்தகத்திலும்,மிட்டாயிலும்தான் பார்க்க முடியும் என்றேன்,படிக்காத அந்த குழந்தையின் தாய்க்குகூட புரிந்துபோனது ஆமாந்தம்பி இப்பல்லாம் எங்க கொய்யாமரம் இருக்கு,எங்க ஊர்ல ஒரு கொய்யா தோப்பையே அழித்து பிளாட் போட்டுட்டானுவ தம்பி என்றாள்,எதிர் இருக்கயில் அந்த நாகரீக பெண் அருகில் உட்கார்ந்திருந்தவர் சார் இதுக்கே அதிர்சியானால் எப்படி எங்க ஊரு பக்கத்துல ஒரு மலையையே கூருபோட்டு வித்துட்டாணுவ இந்த அரசியல்வாதியோ ,எந்த ஊருசார் நீங்க என்று விசாரிக்க,வேலூர் வாலாஜா பக்கம் ஏலகிரி என்ற அவர் ,மனித இனவிருத்தியையும் ,இயற்க்கை அழிக்கப்படுவதையும் யாராலும் தடுக்கமுடியாது சார் என்றார் வேட்டிநுனியில் தன் மூக்குக்கண்ணாடியை துடைத்தபடியே,
கொய்யாப்பழத்தை அந்த நாகரீக பெண்ணிற்கும் ஒருதுண்டு கொடுக்கலாமென்று கூட தோன்றியது,அவர் இங்கு நடப்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துகள்ளவில்லை,ஆனால் நான் பழத்தை சாப்பிட்டு நாக்கால் என் உதட்டை துடைத்து ருசியை உள்ளே உறிஞ்சும் போதேல்லாம் உள்ளுறச் சொல்கிறது,அவள் வாயில் உமிழ்நீர் ஊற்றெடுத்து ஓடுகிறதென்று,
மேல் இருக்கையில் இருந்த பெரியவர் கொஞ்சபழமும்,ஏற்க்கனவே வாங்கியிருந்தாலும்,நான் கொஞ்ச பழமும் வாங்கியதுமே கிழவி முகத்தில் அப்படியொரு சந்தோசம்,காசை வாங்கி இடுப்பு முந்தானயில் சொறிகிக்கொண்டு ஒரு வீராங்கனைப்போல் தன் அடுத்த வியாபாரத்திற்குப் புறப்பட்டால்,
திண்டிவனத்தில் வண்டி நின்றதும் அந்த கிழவியை காணவில்லை என்று தேடினேன்,வெளிப்புற சன்னல் வழியாக வந்து அய்யாவென்று அழைத்தாள்,எல்லா பழமும் வித்துத் தீர்ந்துபோச்சி,மீதி இருக்கும் இந்தஒரு பழத்தை நீ வச்சிக்கொன்னு கொடுத்துவிட்டு தளர்ந்த நடைபோடும் அந்த கிழவியின் மடிநிறைய காசு,மனசு நிறைய சந்தோசம்.

திண்டிவனத்திலிருந்து வண்டி புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த நாகரீகப் பெண்மணியின் செல்போன் ஒலித்தது,போனில் பேசிக்கொண்டிருந்த அவள்,என்னது கொய்யாப்பழமா என்றால்,எனக்கு புரிந்துவிட்டது செல்போனில் யாரோ கொய்யா வாங்கிவரச் சொல்கிறார்கள்,அது அவள் குழந்தையாகக் கூட இருக்கலாம்,ஆனால் அவளுக்கு திருமணம் ஆனதற்கான எந்த அறிகுறியும் எனக்கு தென்படவே இல்லை,அவள் கால்களில் மெட்டி இல்லை,வகிடு எடுக்கும் இடத்தில் குங்குமம் இல்லை,கழுத்தில் தாலி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை,எனவே அது தம்பியாகவோ,பக்கத்து வீட்டுப்பிள்ளயாகவோ தான் இருக்க வேண்டும்,வாங்கி வருகிறேன் என்று சொல்லி செல்போனை வைத்துவிட்டால்,அதுவரை அவளை பார்த்துக்கொண்டிருந்த நான்,அவள் பார்த்ததும் தலையை குனிந்துகொண்டேன்,ஆனால் நான் அவளை பார்த்தேன் என்பது அவளுக்கு தெரியும்,சிறிது நேரம் கழித்து எதிர்இருக்கையில் அவளை காணவில்லை,ஏதேனும் கொய்யாக்காய் கிழவியை தேடி சென்றிருப்பாள் போல,பெட்டிமுழுக்க தேடி கிடைக்காமல் பதட்டத்துடன் வந்து உட்கார்ந்த அந்த பெண்ணிடம்,நீங்க எவ்வளவு தேடினாலும் அந்த கிழவி கிடைக்க மாட்டாள்,ஏனென்றால் அவள் திடிவனத்திலேயே இறங்கிவிட்டால் என்று சொன்னேன்,கிழவியைத்தான் நாம் தேடுகிறோம் என்பது இவனுக்கு எப்படித்தெரியும் என்று பதைபதைத்து போன அவளிடம்,என் பைக்குள் இருக்கும் நான்கு கொய்யாப்பழத்தை எடுத்து கொடுத்தேன்,வாங்க மனமில்லாமல் இருந்த அவளிடம்,நீங்கள் செல்போனில் பேசியதை கேட்டேன் குழந்தைகள் பாவம்,நீங்கள் வாங்கி வருவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களை ஏமாற்றி விடாதீர்கள் என்று சொன்னதும்,கண்கள் கலங்க சொன்னால்,போனில் பேசியது குழந்தை இல்லைசார் என் அம்மா,நாளைக்கு என் அப்பாவிற்கு தலை திவசம்,அவருக்கு கொய்யாப்பழம் ரொம்பபிடிக்கும் அதான் படைப்பதற்கு அம்மா வாங்கிவரச் சொன்னால் என்று,உலகத்தில் எனக்கு நடந்த விஷயம் வேறு யாருக்கும் நடக்கக்கூடாதா என்ன ,எனக்கு தம்பி வடிவில்,அவளுக்கு அப்பா வடிவில்,நம்மோடு கரம் சேர்க்கக்கூடிய ஏராளமானவர்கள் இந்த வண்டியில் பயணம் செய்கிறார்கள்,ஆனால் அதற்க்கான வடிவம் வேண்டுமானால் வேறுமாதிரி இருக்கலாம் ,இருபதாயிரம் ரூபாய்க்கு குழந்தைகளுக்கு பட்டாசுகள் வாங்கிக்கொண்டு செல்பவர்கள் இருக்கும் இதேவண்டியில் தான்,இருநூறு ரூபாய்க்கு துணிவாங்க வக்கில்லாதவனும் செல்கிறான்,அடையார் ஆனந்தபவனில் சில ஆயிரங்களுக்கு இனிப்புகள் வாங்கிச்செல்பவன் பயணிக்கும் இதே வண்டியில்தான்,பக்கத்து வீட்டில் பலகாரம் தரமாட்டார்களா என்ற நம்பிக்கையில் இருப்பவனும் பயணிக்கின்றான்,தலை தீபாவளிக்கு மனைவிக்கு,தங்கக்காப்பும்,ஜரிகயில் பட்டுப்புடவையும்,வாங்கிக்கொண்டு பயணிப்பவன் செல்லும் இதே வண்டியில்தான்,தங்கச்சியின் தலைதீபாவளிக்கு வரிசை வைக்க வக்கில்லாதவனும் பயணிக்கின்றான்,ரயில்கள் மனிதனின் சுமைகளை தூக்கிக்கொண்டு பயணிக்கும் இதே வேலையில்தான்,உள்ளேயிருக்கும் மனிதனின் மனசும் ஏதோஒரு சுமயுடனே பயணிக்கின்றது,ஜன்னலுக்கு வெளியில் ஓடிக்கொண்டிருக்கும் மரங்கள்,மலைகள்,ஆறுகள்,ஓடைகள்,போலவே மனிதன் மனசுக்குள்ளும் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது ,இருவரும் மனசை கட்டுப்படுத்திக் கைக்குள் கொண்டுவருவதற்குள் வண்டி விழுப்புரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது,மௌனம் களைந்து இருவரும் கொஞ்சமாய் முகம்பார்த்து பெசத்துடங்கி,முகப்புத்தகம் முகவரியை பரிமாரும்வரை பேசிக்கொண்டிருந்தோம்,விழுப்புரம் ரயில்நிலையத்தில் வண்டி புரப்படும் நேரம் அறிவிக்கும் போதுதான் வண்டி விழுப்புரம் வந்ததையே உணர்ந்தோம்,சட்டென்று இறங்கி கைப்பைக்குல்லிருந்து காசு எடுத்து நீட்டியவளிடம் சொன்னேன்,இதை நான் வாங்கிக்கொண்டாள் இந்த பயணம் அர்த்தமில்லாத பயனமாய்ப் போகும் என்று,புன்னகை உதிர்த்தவலாய் கைகளை அசைத்தபடி கரைந்துபோனால் என் கண்களிலிருந்து,என் முகப்புத்தகத்தில் எத்தனையோ நண்பர்கள் நிறைந்து கிடந்தாலும் என்மனசுக்கு நிறைவான சிநேகிதியாய் இன்னும் தொடர்கிறாள் மீனாட்சி .........

விழுப்புரத்திலிருந்து வண்டி கிளம்பிவிட்டது ,இன்னும் முக்கால்மணிநேரத்தில் விருதாச்சலம் வந்துவிடும்,உளுந்தூர்பேட்டை பைப்பாஸ் பாலத்திற்குள் வண்டி நுழைந்ததும் அப்பாவிற்கு போன் செய்தது சரியாய்ப் போச்சி,எனக்கு முன்னமே ஸ்டேஷன் வாசலில் அழுக்குவேட்டியுடன் காத்துநின்றார்,தொலைவிலிருந்து பார்ப்பதற்கே பரிதாபமாய் இருந்தார்,கறுத்த முடி ,வெளுத்த உடை,முரட்டு மீசை,பெருத்த உடலென்று,என் அப்பாவிற்கே உரிய கம்பீரத்தை இழந்திருந்தார்,அருகில் சென்றதும் எனக்கு பேச்சேவரவில்லை,வாயா போவலாமா என்றார்,என் பையைவாங்கி xl சூப்பர் வண்டியின் முன்பகுதியில் வைத்துக்கொண்டு கிளம்பும் வேலையில்,தம்பி தம்பி என்று அழைத்தபடி எனக்கு தரவேண்டிய சில்லறையை எடுத்துக்கொண்டு ஓடிவருகிறார் வெங்கடாலம் பெரியவர்,இந்தாப்பா உனக்கு தரவேண்டிய காசு என்றார், வாங்கி பைக்குள் வைக்கும் வேலையில்,இதுயாரு அப்பாவாய்யா என்று கேட்ட அவர், சார் தம்பி ரொம்பகெட்டிக்கார புள்ள,இது மாதிரி ஊருக்கு ரெண்டுபுள்ள இருந்தா ஊரு பொழச்சிக்கும் என்றார்,நானும் ரெடுபுள்ளதான் பெத்தேன்னு நினைச்சிருப்பார் அப்பா,பஸ்ஸ்டாண்டை கடந்து நடுபாலத்தில் போகும்போது அப்பா கேட்கிறார், உனக்கும்,தம்பிக்கும் பேன்ட் ஒரே அளவுதானே,ஆமாம்ப்பா என்றேன், இல்ல அம்மா தம்பிக்கு ஒரு பேன்ட் வாங்கினாள்,அதேஅளவில் உனக்கும் வாங்கிட்டா அதான் கேட்டேன்,போன தீபாவளிக்கு ஒரேமாதிரி ரெண்டு வாட்ச் வாங்கி வைத்திருந்தாள் அம்மா, அம்மாவிற்கும்,அப்பாவிற்கும்,தம்பி இன்னும் உயிருடன் இருப்பதாகவே நினைப்பு,வீட்டிற்குள் நுழைந்ததுமே உடல்கொஞ்சம் சிலிர்த்தது,தோடத்தில் அம்மாவும்,தொத்தாவும் தம்பிக்கு படைக்க முறுக்கு பிழிந்துகொண்டிருந்தார்கள்,மூன்று அருகால்களை கடந்து என் உருவம் எப்படிப்பார்த்தாலோ,மாவுகையுடன் மூச்சிரைக்க ஓடிவந்து,முந்தானையால் என் முகம் துடைத்து,கரம் பற்றிகண்ணீர் வடித்து,எப்புடிய்யா இருக்க,துரும்பா எலச்சிட்டியே,என்று வீட்டிற்குள் அழைத்துச்செல்லும் அம்மாவின் அரவணைப்பில் உணர்கிறேன்,நான் வந்ததற்கான மகிழ்ச்சியையும்,தம்பி வராததற்கான துக்கத்தையும்.


தோழன்
து.ப.சரவணன்

எழுதியவர் : து.ப.சரவணன் (21-Nov-11, 8:10 am)
பார்வை : 951

மேலே