எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?
பிரிந்துவிட்டோம் - காதல் கவிதை

பிரிந்துவிட்டோம் 

கள்ளிகாட்டு இதிகாசமும் இல்லை
கருவாச்சி காவியமும் இல்லை
உணர்வுகளின் பெருங்காவியம்
உணர்ச்சிகளின் ஓவியம் இது

எங்கோ பிறந்தோம்
எங்கெங்கோ வளர்ந்தோம்
கல்லூரியில் சேர்ந்தோம்
கவலைகளை பகிர்ந்தோம்

பாடம் பாதி பரிச்சை மீதி
ஆட்டம் பாதி பாட்டம் மீதி
என கழிந்தேபோகின
இரண்டு ஆண்டுகள்

திறக்கப்பட்ட கல்லூரி கதவு
மூடப்படும் அறிவிப்பால்
மூடிக்கிடந்த மனக்கதவு
திறந்துகொண்டது

பார்த்ததும் வராத காதல் உனை
பார்க்காமல் போய்விடுவேனோ
என்றதும் வந்துவிட்டது
இனி நீதான் என் சொந்தமென்றது

ஆழமான காதல்
ஆக்ரோசமில்லாமல் கசிந்தது
தனிமையில் பேசினோம்
இனிமையாக உணர்ந்தோம்

இல்லறத்தில் இணைவோம்
நல்லறம் செய்வோம்
புது உலகம் செல்வோம்
என்றது என் கனவுலகம்

நாம் மனதில் கலந்தாலும்
உன் இருவரும் என் இருவரும்
பேச்சில்கூட துறவறமாய்
பேசாமல் போர் செய்தனர்

போர் முடிந்துவிட்டது
இருவருக்குமே வெற்றி
உன் இருவருக்கும்
என் இருவருக்கும்

நாங்கள் பிரிந்துவிட்டோம்
போர் புரியாத
நாங்கள் பிரிந்துவிட்டோம்
போர் செய்தவர்களுக்காக

நண்பனே,

காதல் சேரமுடியததால்
செத்தவர்களை கண்டேன்

காதல் வெற்றி பெறுவதற்காக
ஈன்றவர்களை கொன்றவர்களை கண்டேன்

காதல் வெற்றி பெறுவதற்காக
இல்லத்தை துறந்தவர்களை கண்டேன்

எங்களை கருவித்தவர்கள் கலக்காததால்
நாங்கள் காதலை கொன்றோம் என்றாய்........

நண்பனே நீ
"சங்கீத" வாழ்க்கையில்
இணையாமல் போயிருக்கலாம்
தோழியே நீ
"இரத்தின" மாலையை
அணியாமல் போயிருக்கலாம்

ஆனால் உங்களை கருவித்தவர்களை
இரத்தின மாலையுடன்
சங்கீத சந்தோஷ உச்சத்திற்கு
கொண்டு சென்றுவிட்டாய்........

உங்கள் அப்பன் சொல்லிகொள்ளலாம்

"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்"

எல்லாம் என்னால் எழுத முடிந்தது
நீ சொன்ன "பிரிந்துவிட்டோம்"
என்ற வரிகளின் வலியை தவிர

அந்த வலிகளை சொல்ல
இங்கு வார்த்தைகள் இல்லாததால்
இந்த காவியம் முடிகிறது
என் இமைகளில் கண்ணீருடன்.................




மொத்த தேர்வு :

0

x

email


எழுதியவர் :Prakash G

நாள் :16-08-2010 01:34:52 AM
Added by :Prakash G
பார்வை :421


நண்பர்களும் பார்க்க

share with orkut Share

Get Code


1. கருத்து அளிக்க லாகின் (Login) செய்ய வேண்டும்.
2. ஆங்கிலம் மற்றும் எண்களை குறிப்பிட CTRL + G அழுத்தவும்.
உங்கள் கருத்து

புதிய கருத்துகள்

ஆம் எனது விழிகளில் கூட கண்ணீர் .....வெரி குட்...


பதில் அளி

0 வாக்கு

  




நண்பர்களின் கருத்துக்கள்
guru
2010-08-16

1) super

Prakash
2010-08-17

2) சேர்ந்தே இருந்தவர்கள் சேராத அவர்களுக்காக சேர்ந்தே சொன்னார்கள் "நாங்கள் பிரிகிறோம்" நன்றி...............................


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாக இணைந்தவர்

இந்த மாதம் பரிசு பெற்றவர்

Random கவிதைகள்

கவிதைகள்

இதர படைப்புகள்

இதையும் பார்க்கலாம்

Live Cricket Scores

Top Contributors

Top Contributors of this Month

Join Us on follow me