பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

முன்ன பின்ன வரும் ஆட்சி - ஏத்துது
கன்னா பின்னா விலைவாசி - ஏழைகள்
கண்ணீரையும் விலைபேசி - செய்யுது
ஏனோ தானோ அரசாட்சி
விண்ணை முட்டும் விலைவாசி - மக்கள்
தலையில கொட்டும் இடியாச்சு
இலவச பேச்ச நம்பி - நாம
இழிச்ச வாயங்க ஆயாச்சு
ஏழைகளுக்குக் குடிசை சின்னமாச்சு
குடிசையும் சின்னாபின்னமாச்சு
விலைவாசி வலையால
வலை வீசி போட்டாச்சு
வீதியெங்கும் போராட்டம் வெடிக்கலாச்சு - நம்
விதி என்றும் இதுதான்னு
போராட்டம் முடியலாச்சு
உருக்கமான வேண்டுகோளாய் அறிவிச்சாச்சு
பிச்சைக்கு மறுபெயர் விலைவாசியாச்சு
நட்ட நடு இரவு முதல் அமலாச்சு - தமிழனுக்கு
இட்ட சுடு ரொம்ப அனலாச்சு
பட்ட வடு ரொம்ப ஆழமாச்சு
வரி வரியா இட்டதால - மக்கள்
வரிக் குதிரையா ஆயாச்சு - எனி
தேவை ஒரு பெயர்மாற்றம் - நாம்
மக்கள் அல்ல
மாக்கள் என்று

எழுதியவர் : செ.பா.சிவராசன் (25-Nov-11, 1:14 pm)
பார்வை : 345

மேலே