தமிழ் சமுதாயத்தின் நிலை ..........

தமிழ்ச் சமுதாயம் தலைவனற்ற படையாக, மாலுமியற்ற மரக்கலனாகப் பயனற்றுக் கிடக்கிறது. சிலர் அமிலச் சொற்களால், கவிதைகளில், கட்டுரைகளில் தமிழ் இனத்தின் செயல்படாத் தன்மையைச் சுட்டிக் காட்டியவாறுள்ளனர். சில மூத்த, முதிர்ந்த புலமையாளர்கள் குறை சொல்வதும் வழிகாட்டுவதும் கூட மதிப்புக் குறைவென எண்ணித் தவிர்த்துத் தனித்து நிற்கின்றனர். இவ்விரண்டு பார்வைகளையுமே தவிர்க்கலாம். தமிழினம் தலைநிமிர, ஆடம்பர உலகில் தமிழ் இழந்து நிற்கிற மாண்பைப் பெற்றிட வழிகள் எவை எனக்கேட்டு நிற்கிறது தமிழினம். செயலாற்றும் மனங்கொண்டவர்கள், வசைகளைக் கேட்டு வாடிக் கிடக்கிறார்கள். பழமைத பாடியது போதும், பழி கூறியதும் போதும். மாற்றுவழிச் சிந்தனைகள் எழுந்து நிற்கட்டும். ஆற்றவேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுக் காட்டட்டும். பாதைகள் நம்மின் பாடுபொருளாகட்டும். எழுதுகோல்கள் கைகாட்டி, உழைத்துக் கடமையாற்றட்டும்....

எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (25-Nov-11, 6:00 pm)
பார்வை : 1175

சிறந்த கட்டுரைகள்

மேலே