அர்ப்பணிப்பு......................

அம்மா,அம்மா .................. அப்பா எங்கம்மா? எப்பம்மா வருவார்? இன்னைக்கும் குடிச்சிட்டு வருவாரா?......... உங்களுக்கு அடிப்பாரா?.............
எனக்கு பயமா இருக்கும்மா என கூறியவாறே தாய் நிவேதாவின் மடியில் சாய்ந்தான் ஐந்து வயதே நிரம்பிய ரோஷன்.

அந்த பிஞ்சு உள்ளத்தில் பதிந்திருந்த தன் தந்தை பற்றிய எண்ணத்தை நினைத்து அதனை எவ்வாறாயினும் மாற்றிவிட நினைத்த நிவேதா,

இல்லப்பா..... அப்பா இனிமேல் குடிக்க மாட்டேன்னு சொன்னாருல்ல, அதப்பத்தி யோசிக்காம நீங்க அம்மாட மடியில படுத்து தூங்குங்க.......அப்பா வேலைவிட்டு வந்ததும் அப்பாவும் அம்மாவும் ரோஷன் குட்டியும் சில்ரன் பார்க் போவம் என தாய் நிவேதா கூறவே,

அப்பிடியாம்மா எனக்கு அப்பாவோடும் உங்களோடும் விருப்பம்தான் ஆனா அப்பா குடிச்சா மட்டும்தான் எனக்கு விருப்பமில்லம்மா...........ஏன்னா என்னையும் உங்களையும் அடிப்பாரே அதுதான் என்றவன்
அப்பாக்கு ஹோல் எடுத்து தாங்க நான் எப்ப வருவாருன்னு கேக்கப் போறன் என்றான்

நிவேதாவும் குழந்தை மனதை நோகடிக்காமல் நிரேஷிட்கு ஹோல் எடுத்து கொடுக்கவே தன் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தவாரே தாயின் மடியில் உறங்கிப்போனான் ரோஷன் .....

தன் குழந்தை இவ்வாறு ஏங்கிப் போய் இருப்பதை எண்ணி மனமுடைந்து போன நிவேதாவின் கண்களில் கண்ணீர் பனித்தது.............

அறியாத பருவத்திலேயே என் மகனுக்கு ஏன் இந்த வேதனை இறைவா!
இப்படியே போனால் என் குழந்தையின் எதிர்கால வாழ்வு என்னாகும்? அவன் விரக்தியின் விளிம்புக்கு வந்து விடுவானோ? ஒரு வேளை தன் தந்தையையே வெறுத்து விடுவானோ? என பலவாறு எண்ணிய அவள் அப்படியே இருக்கையில் சரிந்து கொண்டாள்

நிரேஷ் அந்தளவு கொடூரமானவன் அல்ல ஆனாலும் இப்போது .................

காலம் செய்த சதியை எண்ணி மனம் நொந்து கொண்டாள்,

நிவேதா ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த பெண்,பாடசாலை காலங்களில் படிப்பில் மிக கெட்டிக்காரியாக இருந்தாலும் அமைதியும், பொறுமையும் சாந்தமும் மற்டவர்க்கு உதவும் பண்பும் நிறைந்தவள்,இதனால் எல்லோரது பாராட்டையும் பெட்ட இவள் தனது சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பிலே வாழ்ந்து வந்தாள்,இவ்வாறு வாழ்ந்து வந்த நிவேதா படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையை பெற்றாள்.

இவளது வேலை மூலம் கிடைத்த வருமானம் குடும்பத்திற்கும் பெரும் உதவியாக இருந்தமையால் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தாள்.

இப்படியாக வேலைக்கு சென்று வருகையிலேயே நிவேதாவுக்கு நிரேஷின் தொடர்பு கிடைத்தது.

அவளின் குண நலன்களை ஆராய்ந்து அறிந்து கொண்ட நிரேஷ் தன் நண்பர்களின் உதவியுடன் நிவேதாவோடு தொலைபேசியில் நண்பனானான்.

காலங்கள் நகர்ந்தது பல நாள் நட்பும் எவ்வாறோ காதலாக மெருகேறியது. இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்தனர், கோவில் குளமென சுற்றினர்.

நாட்கள் மாதமாகியது இனியும் இருவராலும் பிரிந்திருக்க முடியாது எனும் நிலை தோன்றவும் இருவர் வீடுகளிற்கும் தம் காதல் செய்தியை கூறினர்,

ஆரம்பத்தில் பிரச்சனைகள் வந்தாலும் எவ்வாறோ இரு வீட்டு சம்மதம் கிடைத்ததுடன் சில நாட்களில் திருமணமும் இனிதே நிறைவேறியது.......


காதல் திருமணம், நினைத்தது முடிந்துவிட்ட சந்தோசத்தில் இருவரும் சந்தோசமாகவும் உல்லாசமாகவும் சிறகடித்து பறக்கவும் ஆறு மாதங்கள் உருண்டோடியது

இந் நிலையில் நிவேதா நிரேஷின் வாழ்வில் படிப்படியாக புயலடிக்க ஆரம்பித்தது,

ஏதேதோ காரணங்களுக்கெல்லாம் சண்டைகள் உருவானது ,
நிவேதா மீது நிறேஷிட்கு இருந்த அன்பு படிப்படியாக குறைந்தது
ஆனால் நிவேதா வயிற்றில் நிரேஷின் வாரிசு படிப்படியாக வளர்ந்தது ................

வயிற்றிலே தம் காதலுக்கு பாத்திரமான வாரிசு வளர்வது அறிந்து சந்தோசத்தில் மூழ்கிய நிரேஷ் நாட்கள் நகர நகர தன் வாரிசை நிவேதா சுமந்திருப்பதையும் மறந்து
அந்த நாட்களிலும் அடித்தான் .
இவ்வாறு அடியும் உதயுமாக காலம் நகர ....

அந்த பிஞ்சு உள்ளம் இப் பூமியை காண வருவதற்காக துடிக்கவே நிவேதா பிரசவ வலியால் துடித்தாள் .

அப்போது கூட தன் கணவர் அருகிலில்லையே என மனம் வெந்து போனாள்,
வேதனைகள் பனிமூட்டமாய் அவளை சூழ்ந்து வேடிக்கை பார்க்க
விதியை மட்டுமே நொந்தவளாய் தன் உறவினருடன் வைத்தியசாலை சென்றாள், ஆதரவாக தாயும் சகோதரர்களும் மட்டுமே .........

பிரசவ வலியை விட தன் வாழ்வின் வலியே அவளுக்கு வலியை உண்டு பண்ணியது

வேதனையால் துடித்தவளுக்கு ..............
ஆண் மகன் பிறந்திருக்கானம்மா என தாதியர் கூறிய வார்த்தை காதில் தேனாய் பாய்ந்தது,

ஆண்டவா ! என் குழந்தை பிறந்த நேரம் இனியாவது நிரேஷ் பிள்ளைக்காகவாவது வாழனுமென நினைத்து தம் இருவருக்குமிடையில் ஒரு உறவுப்பாலம் தம் குழந்தை என குதூகலித்தாள்.

ஆனால் அதுவும் சில நாட்களே , மீண்டும் சந்தோசம், துக்கம், எல்லாவட்டுக்கும் நிரேஷ் குடித்தான் ,
வீட்டில் அது இன்றி எந்த நிகழ்வுகளும் நடப்பதேயில்லை

இவ்வாறாக தன் வாழ்வில் வந்த இன்னல்கள், துன்பங்கள், அடி, உதைகள், அனைத்துக்கும் முகங்கொடுத்து

தன் மகனுக்காய் வாழவேண்டுமென நினைத்தவளாய் ஒரு உனர்வட்ட ஜடமாய் எப்போதாவது நிரேஷ் திருந்துவான் தன் வாழ்வு மலரும் எனும் நம்பிக்கையுடன் வாழ்கிறாள் தன் மகனுக்காய் வாழ்க்கையை
அர்ப்பணித்து ......................................




எழுதியவர் : demi (28-Nov-11, 12:27 am)
பார்வை : 978

மேலே