சாதனைப் படைப்போம்

இருண்ட விழிகளைக் கல்வியால் திறப்போம்
இரண்டே சாதி மற்றதை சாய்ப்போம்
தமிழே எங்கும் மொழியாய் ஏற்போம்
தமிழால் எங்கும் தகவல் தொடர்வோம்

மரங்களை வளர்த்தே வளங்களைப் பெறுவோம்
மதங்களை மறந்தே மனிதம் காப்போம்
ஓஸோனுக்கு ஆக்சிஜன் இறக்குமதி செய்வோம்
ஆசானுக்கு ஆசானாய் அறிவில் மிளிர்வோம்

எண்ணெய் அருவிப் பண்ணைகள் செய்வோம்
எண்ணந் துருவி நிலவிற்கு ஏணிகள் அமைப்போம்
காற்றுவழி கப்பல் நாட்டிற்கு விடுவோம்
நல்வழிக் கொண்டிட தமிழ் நாகரிகப் பள்ளிகள் தொடங்குவோம்

குற்ளே எவர்க்கும் புனித நூலாய் சேர்ப்போம் - இந்தியர்
குரலே எதிலும் முழங்கிட உயர்வோம்
பூண்டே உறுதி இன்றே ஏற்போம்
மாண்டே போயினும் உறுதியாய் இருப்போம் - போர்
மூண்டே வரினும் தோற்றிட மாட்டோம் - திடம்
கொண்டே கொள்கை புதிதாய் செய்வோம் -முன்
கண்டே உணர்ந்து கலகம் முறிப்போம் - என்றும்
கலாம் வழி நடந்து சாதனைப் படைப்போம்.!


எழுதியவர் : செ.பா.சிவராசன் (28-Nov-11, 10:37 am)
பார்வை : 315

மேலே