எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?
என் இல்லறத்தின் இனிய மனைவி... - வாழ்க்கை கவிதை

என் இல்லறத்தின் இனிய மனைவி... 

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட
ஓர் இனிய நன்னாளில்
சொந்த பந்தங்கள் ஒன்று கூடி
நாதஸ்வரங்கள் முழங்க
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து
உன் கரம் பிடித்தேன்.

அந்நாள் முதல் இந்நாள் வரை
என் கரம் பற்றியே நீ வலம் வருகிறாய்
மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்
நான் தவம் ஏதும் செய்யாமல் கிடைத்த வரம் நீ

ஒரு முழ மல்லிகை பூ
அதை என் கையால் உன் தலையில்
சூடச்சொல்லி நீ ரசிக்கும் அழகே தனி

வேலை முடிந்து இரவில்
எவ்வளவு தாமதமாக வந்தாலும்
உண்ணாமலும் உறங்காமலும்
எனக்காக காத்திருக்கும்
உன் அன்புக்கு ஈடு இணை ஏது

வேலையின் காரணமாக
வெளியில் சென்றால் கூட
ஓயாத உன் அழைப்புகளும்
தீராத உன் ஏக்கங்களும் விரைவில்
என்னை வீட்டில் கொண்டு வந்து சேர்கின்றன

இல்லறத்தை நல்லறமாய் நடத்தும் நீ
என் தாய் தந்தை மீது காட்டும்
அன்பும் அரவணைப்பும்
மேலும் எனை இன்புற செய்கின்றன

எத்தனையோ தருணங்களில்
நம் வாழ்கையில் இடர்பாடுகளை சந்திக்கும்போது
என் தலை கோதி தட்டிக்கொடுக்கும்
உந்தன் அரவணைப்பு தான்
என்னை வழி நடத்தி செல்கிறது

இன்ப துன்பங்களில் இசைந்து கொடுக்கும்
உன்னால் தான் என் வாழ்க்கை
மேலும் வலம் பெற்று கொண்டிருக்கிறது

உறவுகள் பல கடந்து வந்தாலும்
மனைவி எனும்
என் உயிரினும் மேலான
உன் உன்னத உறவை அளித்த
இறைவனுக்கு நன்றிகள் பல....


மொத்த தேர்வு :

15

சராசரி தேர்வு :

3

x

email


எழுதியவர் :Veerabadran.R

நாள் :29-11-2011 02:38:36 PM
Added by :veerabadran
பார்வை :236


நண்பர்களும் பார்க்க

share with orkut Share

Get Code


1. கருத்து அளிக்க லாகின் (Login) செய்ய வேண்டும்.
2. ஆங்கிலம் மற்றும் எண்களை குறிப்பிட CTRL + G அழுத்தவும்.
உங்கள் கருத்து

புதிய கருத்துகள்
veerabadran08-January-12 9:28 AM

இன்ப துன்பங்களில் இசைந்து கொடுக்கும்

உன்னால் தான் என் வாழ்க்கை

மேலும் வலம் பெற்று கொண்டிருக்கிறது என்ற வார்த்தையில் வலம் என்ற தவறான வார்த்தையை பயன்படுத்திவிட்டேன் மன்னிக்கவும். அதனை வளம் என்று சரியாக திருத்தி படிக்கவும்.


பதில் அளி

0 வாக்கு

  

Dr.V.K.Kanniappan07-January-12 4:43 PM

அன்புள்ள வீரபத்ரன்,

உங்கள் 'என் இல்லறத்தின் இனிய மனைவி' கவிதை வாசித்தேன். அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.


பதில் அளி

0 வாக்கு

  

veerabadran08-January-12 11:01 AM

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. தங்களது விமர்சனங்களை இனிதே எதிர்பார்கிறேன்.


பதில் அளி

0 வாக்கு

  

Thilakavathi 29-November-11 3:02 PM

வேலை முடிந்து இரவில்

எவ்வளவு தாமதமாக வந்தாலும்

உண்ணாமலும் உறங்காமலும்

எனக்காக காத்திருக்கும்

உன் அன்புக்கு ஈடு இணை ஏது





என் மனசை பறிந்த வரிகள்... i miss you


பதில் அளி

0 வாக்கு

  

veerabadran29-November-11 6:11 PM

உன் தூண்டுதல் தான் என்னை இக்கவிதை படைக்க வைத்தது. உமக்கு மிக்க நன்றி ....


பதில் அளி

0 வாக்கு

  




நண்பர்களின் கருத்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாக இணைந்தவர்

இந்த மாதம் பரிசு பெற்றவர்

Random கவிதைகள்

கவிதைகள்

இதர படைப்புகள்

இதையும் பார்க்கலாம்

Live Cricket Scores

Top Contributors

Top Contributors of this Month

Join Us on follow me