"ஆசிரியர் மாணவன் நகைச்சுவை" ...

தேர்வு அறை...

ஆசிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க..?

மாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு"..



டீச்சர் : ஏன் லேட்?

சிறுவன் : வெளில ஒரு போர்டு போட்டிருந்தது அதான் லேட்

டீச்சர் : போர்டுக்கும் லேட்டா வர்றதுக்கும் என்ன சம்மந்தம்?

சிறுவன் : பள்ளிப்பகுதி மெதுவாகச் செல்லவும்னு போர்டு வச்சுருந்தாங்க...!!


பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.

மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க..!


ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?

மாணவன் : ஆம்புலன்ஸ் வரும் சார்.!!



ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்..!


ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது?
மாணவன் : தெரியாது சார்!
ஆசிரியர் : பெஞ்சின் மேல் ஏறி நில்லுடா..!
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்?


ஏன் என் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கின் வந்து வச்சிருக்க?

நீங்கதானே சார் சொன்னீங்க? உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.!!


ஏம்மா அஞ்சு! பள்ளிக்கூடத்துக்கு வரும்போது இப்படியா தலையை விரிச்சுப் போட்டுட்டு வர்றது?

நீங்கதான டீச்சர் நேத்திக்கு பூரா பின்னிடுவேன் பின்னிடுவேன்னு சொல்லி கிட்டேயிருந்தீங்க...


எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?

அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.



10ம் வகுப்பு கணினி புத்தகம் எவ்வளவுங்க?

55 ரூபாய்.

என்னப்பா இப்படி சொல்றீங்கள்? கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள்.

வேணும்னா புத்தகம் வாங்கிக்கோங்க. நாங்க எல்லாம் சொல்லிக் கொடுக்க முடியாது.

எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (1-Dec-11, 3:54 pm)
பார்வை : 1849

மேலே