கிக்கு ஏறுதே


சில்லறை வர்த்தகத்தில்
வெளிநாட்டு முதலீடு
பாரத வியாபாரம்
படுத்துவிடும் என்று
நாடு பூரா எதிர்ப்பு
பின் நோக்கிச்
செல்வத்ர்க்கில்லை
அரசாங்கம் மறுப்பு

சாராயக் கடையிலே
சாயந்திர பேச்சு
சில்லறையா கொடுத்த என்ன
மொத்தமா கொடுத்தா என்ன
வாங்குதுக்கு யார் கையிலே
அண்ணே சில்லறை இருக்கு
ஹி.....ஹி .....ஹி
மொத்தமா போட்டா என்ன
சில்லறையா போட்ட என்ன
கிக்கு கிக்குதானே அண்ணே
இவன் யாருடா நாட்டு நடப்பு தெரியாதவன்
இடைல வந்து ஏடா கூடமா உளறுதான்
புது சரக்கு ஏறி இருக்கு
அவேன் கிடக்கான் அண்ணே

எப் டி ஐ வருதாம் அண்ணே
அது யாருடா டெல்லி போலீசா
அட நீங்க ஒன்னு
வெளி நாட்டுக் காரங்க
சில்லறைக்கு வாரங்களாம்
நாசமா போச்சுடா
அவங்களும் ஓட்ட ஏந்திப்புட்டாங்களா
ஆமா எனக்கு ஒன்னு புரியலையே
இங்க உள்ளவங்க எல்லாம் நோட்ட
கத்தை கத்தையா வெளிநாட்டு பாங்கில
வச்சிருக்கான்னு சொல்லுதானுங்க
அவங்க யேன்டா சில்லறைக்கு இங்க வரணும்
சில்லறை வியாபாரம் அண்ணே
அப்படீன்னா மாணிக்கம் கடைக்கும் வருதா
ஆமா ஆமா
அப்பிடி போடுடா தப்பளை குஞ்சு
மாணிக்கம் எல்லாருக்கும் ஊத்துடா ஒரு ரவுண்டு
யேன் கணக்குல எளுதிக்கோ
சீமை சாராயம் சில்லறையில வருது
சீமை சாராயம் சிலு சிலுன்னு வருது
அண்ணே உங்க கணக்கு மொத்தமா சில்லறையா
இவன் யார்ரடா கேனப்பய உளறிகிட்டே
இருக்கான் நாட்டு நடப்புத் தெரியாம
எப் டின்னா சில்லறைடா புரிஞ்சுதா
எப்டின்னா மப்புடா மப்பு

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Dec-11, 5:31 pm)
பார்வை : 885

சிறந்த நகைச்சுவைகள்

மேலே