இறைமறுப்பாளனின் அறிக்கை

நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்திருக்கிறோம்; அறிந்திருக்கிறோம். ஆனால் நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் நாங்கள் உண்மையை வழிபடுகிறோம். நாளும் அதனை நாடுகிறோம்.
நாங்கள் கண்ணை மூடிக் கொண்டு எதையும் நம்புவதில்லை. இதன் காரணமாகவே நாங்கள் ஒழுக்கக் குறைபாடு உடையவர்களாகவும், வீம்புவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறோம். "ஆடையில்லாதோர் வாழும் ஊரில் ஆடையணிந்தவன் பைத்தியக்காரன்" என்ற சொற்றொடரின் உண்மையை உணர்ந்துள்ளோம்.
மதவாதிகள் தந்திரசாலிகளாகவும், அவர்களை நம்புகிறவர்கள் முட்டாளாகவும் இருக்கும் இவ்வுலகின் தற்போதைய நிலை மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கோ ஆகாயத்தில் ஒளிந்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் அசம்பாவிதத்தை நம்பாமல் மனிதன் தன் சொந்த உழைப்பை நம்பும் நாளை எதிர்நோக்குகிறோம்.
நாங்கள் மனுக்குலத்தின் எதிரிகளோ, அழிவை விரும்புகிறவர்களோ, ஒழுக்கச் சீர்குலைவைத் தூண்டுகிறவர்களோ அல்ல. மாறாக, நாங்கள் மனிதன் அறிவைக் கொண்டு தனக்கு எதிர் நிற்கும் முன்னேற்றத் தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் கொண்டவர்கள்.
எங்களை எதிரியாகக் கருதுபவர்கள் காந்தியைத் தோற்றுவித்ததாகப் பெருமை கொள்ளலாம். ஆனால் கோட்சேயையும் அவர்களே தோற்றுவித்தார்கள் என்பதை அவர்களாலேயே மறுக்க முடியாது.
எங்களை ஒழுக்கச் சீர்குலைவைத் தூண்டுபவர்களாக பலர் சித்தரிக்கலாம். ஆனால் எங்களில் ஒழுக்கக்கேடாய் நடந்தவர்களைக் காண்பது மிக அரிது. எந்தக் குற்றவாளியும் "கடவுள் இல்லை என்ற காரணத்தால் துணிவோடு இக்குற்றத்தைச் செய்தேன்" என்று கூறியதில்லை. ஆனால் கடவுளின் பெயரால் நிகழந்த குற்றங்கள் அனந்தம். பிரேமானந்தா, நித்தியானந்தா, யோபு சரவணன், கன்னியாஸ்திரீ ஜெஸ்மியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கேரள கத்தோலிக்க பாதிரியார்கள் என்று இப்பட்டியல் பல பக்கங்களுக்கு நீளும்.
நாங்கள் லாபம் கருதியோ, விளம்பரம் கருதியோ இறைமறுப்பாளரானவர்கள் அல்ல. அப்படி யாராவது எங்களுள் இருந்தால் அவர்கள் போலி சந்நியாசிகளை விட மோசமானவர்கள். நாங்கள் சமுதாய முன்னேற்றத்துக்காக கொள்கை பரப்புவதில் தீவிரங் காட்டுகிறோமேயன்றி மற்றப்படி அல்ல.
நாங்கள் இக்கொள்கையின் மூலம் தனிப்பட்ட எந்த லாபங்களையும் பெற்றதில்லை. ஆனால் பல இழப்புகளை சந்தித்து இருக்கிறோம். எத்தனையோ நபர்கள் தங்களது உற்றார் உறவினரின் வெறுப்பைச் சம்பாதித்தார்கள். எங்களை பலர் இகழ்ச்சியுடன் நோக்கினார்கள். பலர் கொடுஞ்சினத்துடன் நோக்கினார்கள். ஆனால் நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்ப்டவில்லை. ஏனென்றால் உண்மை நாங்கள் சந்தித்த இழப்புகளை விட பல மடங்கு மதிப்புள்ளது. நாங்கள் உண்மை என்று அறிந்தவற்றைப் பலரிடம் கூறினோம். அவர்களால் எங்களை மறுக்க முடியவில்லை. ஆகையால் எதிர்த்தார்கள்.
இருப்பினும் அவர்கள் ஒருநாள் உண்மையை அறிந்து கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மனுக்குல முன்னேற்றத்துக்கு அவ்வுண்மை இன்றியமையாதது என்பதை அவர்கள் ஒருநாள் அறிவார்கள். அதுவரை நாங்கள் அறிந்த உண்மையை

எழுதியவர் : (12-Dec-11, 8:25 am)
பார்வை : 409

மேலே